vegan

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்

vegan

  • நனிசைவ உணவி; சைவ உணவி
  • நனிசைவம்
  • தாவர உணவி
  • புல்லுணவி

விளக்கம்[தொகு]

  • நனிசைவர்கள் மிகத்தீவிரமாகத் தாவர உணவை மட்டுமே சாப்பிடும் கொள்கை உடைய மக்கள்... உணவாக எந்தவொரு உயிரினத்தின் இறைச்சியையும் அல்லது முட்டையையும் சாப்பிடமாட்டார்கள்...எந்தவொரு விலங்கினத்தின் பாலையோ அல்லது பாலிலிருந்து உண்டாகும் வெண்ணெய், நெய், பாலடைக்கட்டி, தயிர், மோர் ஆகியவைகளையோ உபயோகிக்கமாட்டார்கள்...பட்டுப்பூச்சிகளைக் கொன்றுத் தயாரிக்கப்பட்ட பட்டுத்துணிகளை அணிய மட்டார்கள்...தேன் கூட்டைக் கலைத்து, தேனீக்களைக் கொன்று எடுக்கப்பட்ட தேனையும் தொடார்...விலங்குகளின் தோலினால் தயாரிக்கப்பட்ட காலணி, இடுப்பு வார்ப்பட்டை, தோற்கைப்பைகள்,பணப்பைகள்,உடைகள் அல்லது மற்ற எந்தத் தோற்பொருட்களையும் பயன்படுத்தமாட்டார்கள்...மருத்துவ நோக்கிலும் அசைவம் கலந்த மருந்துகள், மீன் எண்ணெய் போன்றவற்றை விலக்குவர்...மொத்தத்தில் பிற உயிரினங்களுக்கு நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்புடைய எந்த பொருட்களுக்கும் மறுப்பே இவர்களின் கொள்கை


உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் vegan
"https://ta.wiktionary.org/w/index.php?title=vegan&oldid=1626376" இலிருந்து மீள்விக்கப்பட்டது