கரடி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
கரடி
ஆண் பனிக்கரடி
கரடியின் சத்தம்

கரடி, பெயர்ச்சொல்.

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  1. கரடி, உடலில் மயிர் போர்த்திய, பெரிய உருவம் உடைய அனைத்துண்ணி விலங்கு. இது அறிவியலில் ஊர்சிடே (Ursidae) குடும்பத்தில் உள்ள ஊர்சினே (Ursinae) என்னும் உட்குடும்பத்தில் உள்ள ஒரு விலங்கு. ஒருவாறு நாய்ப்பேரினத்தோடும் தொடர்புடைய விலங்கு. இன்று உயிர்வாழும் கரடிகளில் மொத்தம் எட்டு இனங்கள் உள்ளன. இவை பரந்து பட்ட தட்பவெப்ப சூழல்களில் வாழ்கின்றன. வடமுனைப்பகுதியில் வெண்ணிறப் பனிக்கரடி வாழ்கின்றது; உளியம்.
  2. புரட்டு, பொய் (எ. கா.) - "கரடி விடாதே. நானும் அங்கதான் இருந்தேன்."
  3. சிலம்பம்

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. bear
  2. lie.
  3. fencing
  • பிரான்சியம்
  1. ours (ஊர்ஸ்)
  • எசுப்பானியம்
  1. osa, oso
  • இந்தி
  1. भालू
  2. झूठ

 :( யானை)

என்ற தமிழ் விக்கிப்பீடியாவின் விரிவான கட்டுரையையும் காண்க.


( மொழிகள் )

சான்றுகள் ---கரடி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=கரடி&oldid=1993086" இலிருந்து மீள்விக்கப்பட்டது