ciborium

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ciborium:
அயேர்பே நகர் தூய பேதுரு கோவிலில் உள்ள நற்கருணைப் பாத்திரம். பரோக்கு கலைப் பாணி. 18ஆம் நூற்றாண்டு. எசுப்பானியா
ciborium:
போட்சுடாம் நகர் புனித நிக்கொலாசு கோவிலின் பலிப்பீடமும் அதன்மேல் எழுகின்ற திருப்பந்தல் கட்டடமும். 19ஆம் நூற்றாண்டு. செருமனி

ஆங்கிலம்[தொகு]

ciborium(பெ)


பொருள்
  1. (கிறித்தவ வழக்கில்) நற்கருணைப் பாத்திரம் (நற்கருணை அப்பத் துண்டுகளைப் பாதுகாக்க உதவும் கலம்)
  2. திருப்பந்தல் கட்டடம்
விளக்கம்
  1. ciborium என்னும் சொல்லின் மூலம் கிரேக்கம்-இலத்தீன் ஆகும். உணவு அருந்த/பருக பயன்படும் கலம் என்பது இதன் பொருள். இதன் தொல்மூலம் எகிப்திய மொழியாகலாம் எனவும் அறிஞர் கருதுகின்றனர்.
  2. நற்கருணை விருந்துக்கான அப்பத்தையும் இரசத்தையும் ஒப்புக்கொடுக்கின்ற பலிப்பீடத்திற்கு அணியாக எழுப்பப்படுகின்ற திருப்பந்தல் கட்டடமும் ciborium என்னும் பெயர் பெறும்.
பயன்பாடு


( மொழிகள் )

சான்றுகோள் ---ciborium--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +நற்கருணை - தமிழ்ப் பேரகரமுதலி+நற்கருணை - பெப்ரீசியு தமிழகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=ciborium&oldid=1857334" இலிருந்து மீள்விக்கப்பட்டது