அகத்திக்கீரைத் தைலம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

(கோப்பு)
அகத்திக்கீரை

பொருள்[தொகு]

அகத்திக்கீரைத் தைலம்,

பெயர்ச்சொல்.
  1. ஒரு மூலிகை எண்ணெய்

விளக்கம்[தொகு]

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. herbal oil prepared from hummingbird tree leaves
  • Agati Grandiflora &
  • Sesbania grandiflora

தைலம் காய்ச்சும் முறை[தொகு]

  • அகத்திக்கீரையை காம்பு, பழுப்பு, புழுக்கள், தூசி இல்லாமல் சுத்தப்படுத்தி நீர்விட்டுக் கழுவி, பின்னர் நீரில்லாமல் வடித்தெடுத்துக் கொள்ளவேண்டும்...இதை இடித்துப் பிழிந்து வடிகட்டிய சாறு அரைப்படி, அப்பட்டமான நல்லெண்ணெய் அரைப்படி, இவை இரண்டையும் பழகிய மட்பாண்டத்திலிட்டு அடுப்பிலேற்றிச் சிறுக எரித்து, சாறு சுண்டி மெழுகு பதம் வரும்போது கஸ்தூரிமஞ்சள், பளிங்கு சாம்பிராணி, பச்சைக் கிச்சிலிக் கிழங்கு, விளாமிச்சை வேர் அகியவைகளை வகைக்கு அரை பலம் வீதம் இடித்துத் துகள்செய்து போட்டுத் தைலத்தை அடுப்பிலிருந்து கீழிறக்கி வடித்து ஆறியபின் சீசாவில் வைத்துக்கொள்ளவேண்டும்...இந்தத் தைலத்தை மேற்கண்ட விளக்கத்தில் சொன்னபடி உபயோகித்துப் பலன் பெறலாம்...


"https://ta.wiktionary.org/w/index.php?title=அகத்திக்கீரைத்_தைலம்&oldid=1898314" இலிருந்து மீள்விக்கப்பட்டது