இல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

இல் (பெ)

  1. வீடு
  2. இடம்
  3. இல்லறம்
  4. மனைவி
  5. குடி
  6. இராசி
  7. மருத, முல்லை நிலங்களின் தலைவியர்
  8. இன்மை
  9. சாவு
  10. (இலக்கணம்) ஒர் எதிர் மறையிடைநிலை. செய்திலேன்
  11. (இலக்கணம்) ஐந்தாம் வேற்றுமை உருபு. காக்கையில் கரிது களம்பழம்
  12. (இலக்கணம்) ஏழாம் வேற்றுமை உருபு. மணியில் ஒளி
  13. (இலக்கணம்) வினையெச்ச விகுதி. இருவர்தந்நாளும் பெறில் (விதான. கடிமண. 17)
  14. தேற்றாங்கொட்டை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. house, home
  2. place
  3. domestic life
  4. wife
  5. family
  6. constellation, zodiacal sign
  7. lady of rank in towns or forest-pasture tracts
  8. non-existence
  9. death
  10. (Gram.) a negative sign
  11. (Gram.) a sign of abl. as in காக்கையில் கரிது களம்பழம்
  12. (Gram.) a sign of the loc. as in மணியில் ஒளி
  13. (Gram.) if, a suffix of verbs used in a conjunctive sense
  14. clearing-nut
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • ஈனமா யில் லிருந் தின்றி விளியினும் (நாலடி. 198)
  • இல்வாழ்வா னென்பான் (குறள்., 41)
  • புகழ்புரிந் தில்லிலோர்க் கில்லை (குறள்., 59)
  • இற்பிறந்தார் (குறள்., 951)
  • இல்லா மலகமிரண்டு மயின்றால் (இராசவைத். 45)


ஆதாரங்கள் ---இல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :இல்லம் - இல்லகம் - மனை - வீடு - இல்லறம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=இல்&oldid=1205466" இலிருந்து மீள்விக்கப்பட்டது