உத்தாரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

உத்தாரம் (பெ)

பொருள்
  1. மறுமொழி, பதில்
  2. அனுமதி
  3. கட்டளை
  4. நியமமாகக் கொடுக்கும் சம்பளம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. answer, reply (Colloq)
  2. permission, leave
  3. command, direction, order
  4. regular, fixed payment
விளக்கம்
  • உத்தரம் - உத்தாரம்
பயன்பாடு
  • உத்தாரந் தாரும்
  • “குத்தம், மன்னிக்கணும் சாமி” - குனிந்து வணங்கிய தலைகளுடன் கேட்டார்கள்.
"மூணு வருஷமா பஞ்சம் சாமி. அதனாலே சாமிக்குச் செய்ய வேண்டிய வினைகள் எல்லா செய்யமுடியலே. இனிமே செய்றோம் சாமி.”
சாமியின் கோபம் குறையவில்லை. வெறிபிடித்து, திக்குகள் எட்டையும் மிதிப்பவள்போல் சுழன்றுகொண்டிருந்தாள்.
“உத்தாரம் சொல்லணும் சாமி” - இடக்கைமேல் வலக்கை ஏந்தி, வாயருகில் வைத்தபடி, பணிந்து அவர்கள் கேட்டார்கள்.
தைலி மன்னித்துவிட்டாள். சாமி வடிவத்திலிருந்த அவளிடமிருந்து, அந்த ஏழை அரிஜன மக்களுக்கு உத்தாரம் கிடைத்து விட்டது. இனிமேல் வருஷா வருஷம் சாமிக்கு காப்பு கட்டி, பொங்கல் நடத்தவேண்டுமென்று உத்தரவு கிடைத்தது. (தாலியில் பூச்சூடியவர்கள் - பா. செயப்பிரகாசம்)

(இலக்கியப் பயன்பாடு)

  1. பத்தாவுந் தானும் பதியோடு இருப்பார்க்கு உத்தாரம் ஏதுக்கடி - குதம்பாய் உத்தாரம் ஏதுக்கடி? ((குதம்பைச் சித்தர்))
  2. வாசற்காரர்க் குத்தாரம்பண்ணி ((தமிழ்நா. 226))
  3. மாதவழி நூறுபொன்னு முத்தாரம் (தெய்வச். விறலி விடு. 295)

ஆதாரங்கள் ---உத்தாரம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=உத்தாரம்&oldid=1098084" இலிருந்து மீள்விக்கப்பட்டது