எதிர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பொருள்-1[தொகு]

  • எதிர், பெயர்ச்சொல்.
பொருள்
மொழிபெயர்ப்புகள்
முன்னுள்ளது that which is opposite, over against, in front, before
முன்னால் in front
கைம்மாறு something in return
வருங்காலம் future tense
இலக்கு target, aim

பயன்பாடு[தொகு]

  • எதிர்காலம் - future
  • எதிர்வீடு - house in front
  • எதிரில் வராதே - don't come in front of me
  • சூலையினுக் கெதிர்செய்குறை யென்கொல் (பெரியபு. திருநாவுக். 73)
  • எதிரதுதழீஇய வெச்சவும்மை
  • மற்றெதிர் பெறாமையின் வெளிபோகி (இரகு. திக்குவி. 169)
  • என் வில்வலிகண்டு போவென் றெதிர்வந்தான் (திவ். பெரியாழ். 3, 9, 2)

பொருள்-2[தொகு]

  • எதிர், வினைச்சொல்.
  1. எதிர்த்தல்
பொருள்
மொழிபெயர்ப்புகள்
தாக்கு encounter, oppose, withstand, resist
சந்தி meet face to face
தடு prevent, hinder
உண்ட உணவு திரும்பி மேல்வருதல், குமட்டு retch, nauseate, turn the stomach

பயன்பாடு[தொகு]

  • இத்திறமாகிய படையோ டெப்படி நாஞ்சிற்படைகொண் டெதிர்ப்ப தென்றான் (பாரத. பதினெட். 15)
  • உண்ட பண்டம் வாயில் எதிர்க்கிறது
  • எதிர்த்துப் பேசாதே - don't oppose me
  • சிற்றவ்வைமார்களைக் கண்பிழைப்பித் தெதிர்த் தெங்குநின் றெப்பரிசளித்தான் (திருக்கோ. 396)


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=எதிர்&oldid=1971900" இலிருந்து மீள்விக்கப்பட்டது