எல்லி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

எல்லி(பெ)

  1. சூரியன்
  2. பகல்
    இரவொ டெல்லியுமேத்துவார் (தேவா. 344, 8).
  3. இரவு
    எல்லியிது காலையிது (சீவக. 1877).
  4. இருள்
    நீரரையெல்லி யியங்கன்மினே (இறை. 30, உதா. 217).
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. sun
  2. daytime
  3. night
  4. darkness
விளக்கம்
பயன்பாடு
  • ஆறுமுக நாவலர் "தமிழில் பேசி எல்லோரையும் திணற அடிக்கிறேன் பார்" என்று எண்ணியவராய், "அஞ்ஞான்று எல்லி எழ நானாழிப் போதின் வாய் ஆழிவரம் பணித்தே காலேற்றுக் காலோட்டப் புக்குழி" என்று விடை சொன்னார். ஆறுமுக நாவலர் கூறிய விடை இதுதான்: "அன்று சூரியன் வானத்தில் எழுந்து நான்கு நாழிகை இருக்கும்; நான் கடல் ஓரத்தின் அருகே காற்று வாங்கியவாறு உலாவச் சென்றபோது"! (திணற அடித்த தமிழ்! தமிழ்மணி, 09 அக் 2011

(இலக்கியப் பயன்பாடு)

  • ‘எல்லி விட்டன்று வேந்து’ எனச் சொல்லுபு பரியல் (நற்றிணை 121) - வேந்து எல்லி விட்டன்று எனச் சொல்லுபு பரியல் - நம் அரசன் நேற்றிரவுதான் போரை முடித்து நின்னைச் செல்லுமாறு விடை கொடுத்தான் என்று கூறி வருந்தாதே.

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---எல்லி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

எல், எல்லை, கதிரவன், பரிதி எல்லிமனை, எல்லியறிவன், எல்லிநாதன், எல்லிநாயகன், எல்லிப்பகை

"https://ta.wiktionary.org/w/index.php?title=எல்லி&oldid=1986626" இலிருந்து மீள்விக்கப்பட்டது