கருணைக் கொலை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கருணைக் கொலை, பெயர்ச்சொல்.

  • கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டவரை மருந்து முதலியன மூலம் அல்லது பல (உயிரிவளி போன்ற)அளிப்புக்களை நிறுத்துவதன் வாயிலாக "கொலை" செய்து விடும் ஒரு பழக்கம்.
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
  • ஒருவர், எந்த ஒரு மருத்துவ நடவடிக்கைகள்(சிகிச்சைகள்) வாயிலாகவும் சரிசெய்யப்பட முடியாத ஒரு கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டு, அந்நோயினால் மிகுவும் துன்பப்படுகிறார் என்றால், வேறு எந்த நடவடிக்கை வாயிலாகவும் அவரை விடுவிக்க இயலாத வேளையில் அவரை அத்துன்பத்திலிருந்து விடுவிக்க, அவரைக் மருந்துமூலம் இறந்துவிடுமாறு "கொலை" செய்யும் ஒரு நடைமுறைக்கே கருணைக் கொலை என்று பெயர். இதற்கு பாரளாவிய ஆதரவும் உண்டு; எதிர்ப்பும் உண்டு. விலங்குகளை இவ்வாறு கொலை செய்வது பல இடங்களில் நடைமுறையில் உள்ளது.
பயன்பாடு
  • இந்தியாவில் கருணைக் கொலை செய்ய எந்தச் சட்டமும் இசைவு அளிப்பதில்லை.
  • "கருணைக் கொலையை நீங்கள் ஆதரிப்பீர்களா?".
"நிச்சயம் ஆதரிக்கிறேன். உங்கள் இருப்பை முடிவுக்குக் கொண்டு வர உங்களுக்கு உரிமை இல்லையா? என்னால் முடியும் என்றால் சயனைட் விஷத்தைத்தான் வாங்குவேன்... அதைச் சாப்பிட்டால் மரணம் உடனே சம்பவித்து விடும். ஒரு காய்கறியாக இருக்க எனக்கு விருப்பமில்லை".. (குஷ்வந்த் சிங், அ.முத்துலிங்கம்)
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---கருணைக் கொலை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=கருணைக்_கொலை&oldid=1061888" இலிருந்து மீள்விக்கப்பட்டது