கருப்பூரப்புல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
கருப்பூரப்புல்
கருப்பூரப்புல்
கருப்பூரப்புல்

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

கருப்பூரப்புல்(பெ)

பொருள்[தொகு]

  1. ஒரு வகை மூலிகைப் புல்

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. Lemongrass
  2. fevergrass
  3. citronella

விளக்கம்[தொகு]

  • இந்தப்புல் தென்கிழக்கு ஆசிய நாடுகள் முக்கியமாகப் பிலிஃபைன் நாட்டில் ஏராளமாகக் காணப்படும் தாவரமாகும்...மற்றும் வெப்ப மண்டல பிரதேசங்களில் விளைகிறது... உணவுக்கு மணமும் சுவையும் கூட்டவும், மருந்துப்பொருளாகவும், இதன் எண்ணெய் நறுமணச் சிகிச்சையிலும், சில வேளைகளில் தேனீ வளர்ப்பிலும் பயனாகிறது.

மருத்துவப் பயன்கள்[தொகு]

  1. ஒரு பழைய மட்குடுவையில் அரை படி கொதிக்கும் நீர் விட்டு அதில் பத்து ரூபாய் எடை கருப்பூரப்புல்லைப் போட்டு வாய்மூடி மூன்று மணி நேரம் வைத்துப் பின்னர் வடிகட்டி வைத்துக்கொண்டு பெரியவர்களுக்கு வேளைக்கு அரை முதல் ஒரு அவுன்ஸ் வீதம் தினம் மூன்று வேளை கொடுத்து வந்தால் தடைப்பட்ட மாதவிலக்கு, சூதகவாயு, வாந்தி, குளிர் சுரம், அரிப்புடைய படை, வாதபித்தம், தொந்தசுரம், கோழை, அருசி ஆகியனவற்றைப்போக்கும்...பசியை உண்டாக்கும்...
  2. இதே கியாழத்தில் சிறிது இஞ்சிச்சாறும், இலவங்கப்பட்டைச் சூரணமும் கூட்டிக் குழந்தைகளின் வயதுக்குத் தக்கவாறு வேளைக்கு ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி அளவு தினமும் மூன்று வேளை கொடுக்க பேதி, அஜீரணம், வயிற்றுப்பொருமல் போகும்...
  3. இந்தக் கியாழம் பக்குவம் செய்யும் போதே புதியனா, மிளகு, சுக்கு வகைக்கு கால் பலம் வீதம் நசுக்கிப்போட்டு சிறிது நெருப்பனலில் வெதுப்பி மூன்று மணி நேரம் ஊறவைத்து, வடித்து எடுத்த கியாழத்தை மேற்சொன்ன அளவின்படி கொடுத்துவர வயிற்றுபுசம், வாந்தி, பேதி, சுரம், சலிப்பு, குடலிறைச்சல் குணமாகும்...
  4. இந்தப் புல்லானது முக்கியமாக வயிற்றிலுள்ள வாயு, சீதளம், நரம்புகளின் இசிவு முதலிய உபத்திரவங்களைப் போக்குவதற்கு இன்றியமையாதது...



( மொழிகள் )

சான்றுகள் ---கருப்பூரப்புல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=கருப்பூரப்புல்&oldid=1218866" இலிருந்து மீள்விக்கப்பட்டது