கிழங்கு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

கிழங்கு:
உருளைக்கிழங்கு
கிழங்கு:
வெள்ளை முள்ளங்கிக் கிழங்கு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • கிழங்கு, பெயர்ச்சொல்.
  1. செடிகொடி முதலியவற்றின் மூலம்
    (எ. கா.) தீங்கனி கிழங்கு செழுங்காய் நல்லன (மணி. 17, 58)
  2. காரணம்
    (எ. கா.) நாபிக்கமல முதற்கிழங்கே (திவ். திருவாய். 10, 10, 3).

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. esculent or bulbous root, as potato, yam, turnip, parsnip, palmyra root
  2. cause

விளக்கம்[தொகு]

  • சிலவகைச் செடி, கொடிகளின், பருத்துக் கொழுத்த, முற்றிலும் சதைப்பிடிப்புள்ள நிலத்தடித் தண்டுப்பகுதி, (இது வேர்ப்பகுதியல்ல) மனிதர்களின் உணவாகப் பயன்பட்டு, கிழங்கு எனப்படுகிறது..செடிகொடிகளின் கீழாக, நிலத்திற்கு அடியில் தண்டில் உண்டாவதால், கிழங்கு என்றாகிறது...மேலும், சிலவகைக் கிழங்குகள் மருந்துப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகின்றன...உணவுக் கிழங்குகளில் உருளை, சேனை, கருணை, சேப்பங் கிழங்கு, செங்கிழங்கு, வெள்ளை, மஞ்சள் முள்ளங்கி ஆகியன இவ்வகையில் குறிப்பிடத்தக்கனவாகும்...மஞ்சள் கிழங்கு, கோரைக்கிழங்கு போன்றவை மருத்துவப் பொருட்களாகப் பயனாகின்றன...



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கிழங்கு&oldid=1968263" இலிருந்து மீள்விக்கப்பட்டது