கொழுந்து

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


கொழுந்து:
தேயிலைக் கொளுந்து
கொழுந்து:
பழுப்பு நிறத்தில் காணப்படும் வேப்பிலை கொளுந்து
பொருள்

கொழுந்து(பெ)

  1. மெல்லிய இளந்தளிர்
  2. நெருப்பு ஜூவாலை, சுடர்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. tender shoot, twig, sprig
  2. flame
பயன்பாடு
  • 20 கிலோவுக்கு மேல் கொழுந்து பறிக்க வேண்டுமென்ற நிர்ப்பந்தத்திற்கு ஒப்பந்தத்திற்கு துணைநின்ற தொழிற்சங்கங்கள்
  • தீ கொழுந்து விட்டு எரிந்தது.

சொல்வளம்[தொகு]

  1. இளந்தளிர்
  2. அறிவுக்கொழுந்து
துளிர் --> தளிர் --> கொழுந்து --> இலை --> பழுப்பு --> சருகு


மூலக்காரணம்[தொகு]

கொழ் / கொழு என்ற வேர்சொல்லக்கு "கீழ்நோக்கி , தலை கவிழ்ந்த " என்று பொருள்.

சில தாவரங்களில் இளந்தளிர் தாழ்ந்து நிற்கும் ( உதாரணமாக பயறுகள் ) . எனவே அதன் தலைகவிழ்ந்த நிலையைச்சுட்டி ஆகுபெயராக "கொழுந்து" என்றானது

( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கொழுந்து&oldid=1969866" இலிருந்து மீள்விக்கப்பட்டது