தபுதாரன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

தபுதாரன்(பெ)

  • கைம்மான்
  • மனைவியிழந்தவன்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

விளக்கம்
  • கைம்மை என்றால் துணையை இழந்த கையறுநிலை. துணைவனை இழந்தவள் கைம்பெண். அவ்வாறே துணைவியை இழந்தவன் கைம்மகன் அல்லது கைம்மான்.
  • மனைவியை இழந்த ஆண் ஒருவன் மீண்டும் மணம் முடிக்காதிருப்பின் அவன் தபுதாரன் என்று அழைக்கப்படுவான்.
  • தமிழ் மொழியின் பொருள் இலக்கணத்தை விளக்குகின்ற "புறப்பொருள் வெண்பா மாலை" என்னும் நூல், மனைவியை இழந்த கணவன் வருத்தத்துடன் தனியே வாழும் நிலையை "தபு-தார நிலை" என்கிறது. "தபு" என்றால் "இறத்தல்" என்றும், "தாரம்" என்றால் "மனைவி" என்றும் பொருள். தபுதாரன் என்பவன் மனைவியை இழந்தவன். சான்றாக,
பைந்தொடி மேல்உலகம் எய்தப் படர்உழந்த
மைந்தன் குரிசில் மழைவள்ளல் - எந்தை
தபுதாரத்து ஆழ்ந்த தனிநிலைமை கேளாச்
செவிடாய் ஒழிக என் செவி
எனும் பாடல் அமைகிறது. இப்பாடல், தன் மனைவி இறந்த பின் மறுமணம் செய்துகொள்ளாமல், அவள் நினைவால் வருந்திப் புலம்பும் நிலை பண்டைக்கால ஆடவரிடம் நிலைபெற்றிருந்ததை எடுத்துரைக்கிறது. பின்னர் நிகழ்ந்த கால மாற்றத்தின் காரணமாக அந்நிலை மாறி, "பெத்த அம்மா செத்தா; பெத்த அப்பன் சித்தப்பன்" என்ற பழமொழிக்கேற்ப ஆடவர்கள், மனைவி இறந்தவுடன் பிற பெண்களை மணந்து கொண்டதாலும், மனைவி உயிருடன் இருக்கும்போதே பல தாரங்களை மணந்து கொண்டதாலும் "தபுதாரன்" என்ற இச்சொல் வழக்கொழிந்து போய்விட்டது. ஆகையால், கைம்பெண் என்ற சொல்லுக்கு இணையான ஆண்பாற் சொல் "தபுதாரன்" என்பதாகும்.(தபுதாரன், தமிழ்மணி, 20 மே 2012 )
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள்[தொகு]

சொல்வளப் பகுதி[தொகு]

ஆதாரங்கள் ---தபுதாரன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தபுதாரன்&oldid=1986710" இலிருந்து மீள்விக்கப்பட்டது