தம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

தம்(பெ)

  1. இலக்கணம். வேற்றுமை உருபுக்கு ஏற்பத் திரியும் தாம் என்பதன் வடிவம்; பெரும்பான்மை படர்க்கைப்பன்மையுடன் சேர்ந்துவரும் சாரியை
  2. உடல் வலிமை தேவைப்படும் கடினமான செயல்களுக்கு மூச்சை உள்ளிழுத்து அடக்குதல்; மூச்சடக்குகை
  3. மூச்சு
  4. புகைப் பிடிக்கையில் புகையை ஒருமுறை உள்ளிழுத்து வெளிவிடுதல்
  5. சதம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. flexional increment generally used along with the nouns of third person plural; oblique of தாம்
  2. holding the breath especially during hard tasks such as lifting something heavy, or going under water
  3. breath
  4. puff
  5. hundred
விளக்கம்
பயன்பாடு
  • அவர் தம் பிடித்து அந்தக் கனமான மூட்டையைத் தூக்கினார்.
  • அவர் தம் பிள்ளைகளை மிகவும் நேசித்தார்.
  • ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தம் பிள்ளை தானாக வளரும் (பழமொழி)

(இலக்கியப் பயன்பாடு)

  • தம்மிடை வரூஉம்படர்க்கை மேன (தொல். எழுத். 191).
  • உண்ணீர் உண்ணீரென்றே ஊட்டாதார் தம் மனையில் உண்ணாமை கோடி பெறும் (ஔவையார்).

(இலக்கணப் பயன்பாடு)

தாம் - மூச்சு - மூச்சடக்கு - புகைப்பிடி - தம்மடி - தம் பிடி - தமது

ஆதாரங்கள் ---தம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தம்&oldid=1995768" இலிருந்து மீள்விக்கப்பட்டது