தூண்டில்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


தூண்டில். 1-கோல், 2,4-இழை, 3-தக்கை, 5. முள்
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

தூண்டில்(பெ)

  1. ஒரு நுனியில் கொக்கி வடிவ முள்ளும் நடுவில் தக்கையும் கொண்ட உறுதியான இழை இணைக்கப்பட்ட நீண்ட மீன்பிடி கோல்
  2. மீன்பிடி கோலின் இழை நுனியில் உள்ள கொக்கி முள்
  3. வரிக்கூத்து வகை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. fishing rod
  2. fish hook, fishhook, fishing tackle
  3. hook
  4. a kind of masquerade dance
விளக்கம்
பயன்பாடு
  • பெரியவர் ஒருவர் ஆற்றங்கரை ஓரமாக வந்து கொண்டிருந்தார். அங்கே ஒருவன் தூங்கி வழிந்தபடி ஆற்றில் தூண்டில் போட்டுக் கொண்டு இருந்தான். தூண்டில் தக்கை நீருக்குள் அமிழ்வதைக் கண்ட அவர், "உன் தூண்டிலில் மீன் சிக்கி உள்ளது. வெளியே இழு" என்றார். "ஐயா! நீங்களே அந்த மீனை வெளியே இழுத்து எனக்கு உதவி செய்யுங்கள்" என்றான் அவன். அவரும் தூண்டிலை இழுத்தார். அதில் பெரிய மீன் சிக்கி இருந்தது. "நல்ல பெரிய மீன்" என்றார் அவர். "ஐயா! தயவு செய்து தூண்டிலில் இருக்கும் அந்த மீனை எடுத்துப் பக்கத்தில் இருக்கும் கூடையில் போட்டு விடுங்கள்" என்றான் அவன். (விரும்பும் பெண், நகைச்சுவை, கூடல் )
  • காத்திருக்கேன் மீனே தூண்டில் இட நானே! (திரைப்பாடல்)

(இலக்கியப் பயன்பாடு)

வெளியே சுடர் விளக்கினை போல்
நீண்ட பொழுதாக என்
நெஞ்சம் துடித்ததடி (பாரதியார்)
  • தூண்டிற்பொன் மீன்விழுங்கியற்று (குறள், 931).
  • சூலந்தருநட்டந் தூண்டிலுடன்(சிலப். 3, 13, உரை)

 :மீன் - புழு - வலை - தக்கை - தூண்டு - தூண்டுகோல்

ஆதாரங்கள் ---தூண்டில்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தூண்டில்&oldid=1979974" இலிருந்து மீள்விக்கப்பட்டது