நபி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


(கோப்பு)
பொருள்

நபி(பெ)

  • இறைத் தூதர்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
  • அரபிச் சொல். மனிதர்களை நல்வழிப்படுத்த இறைவனால் தேர்ந்து எடுத்து அனுப்பபட்ட தூதர்களையே நபி என்று இஸ்லாமியர் அழைகின்றனர்
பயன்பாடு
  • .இஸ்லாமிய மற்றும் பிற ஆபிரகாமிய மதங்களின் நம்பிக்கையின்படி முதல் மனிதராக ஆதம் நபி (அலை) அவர்களை இறைவன் படைத்தான். பின் அவர்களின் விலா எலும்பில் இருந்து ஹவ்வா என்பவரை படைத்தான். பின் இவர்களின் சந்ததிகள் இந்த உலகை நிரப்பினர். அந்த மக்கள் இறைவனை மறந்து அநீதியின் பக்கம் சாயும் பொழுது, அவர்களை நல்வழிப்படுத்த இறைவன் தனது தூதர்களை அனுப்பினான். இவ்வாறு அனுப்பப்பட்ட தூதர்களையே நபி என்று இஸ்லாமியர் அழைகின்றனர். இப்ராஃகிம்(அலை) (ஆபிரகாம்). மூசா(அலை) (மோசசு), ஈசா(அலை)(இயேசு) ஆகியோர் நபிகளில் சிலர். இசுலாமியரின் நபியாக போற்றப்படும் ஈசா நபியையே கிறித்தவ சமயத்தோர் இறைவனாக வணங்குகின்றனர். இதன் பிறகே முகம்மது நபி இறைவனால் அனுப்பப்பட்டார்..
(இலக்கியப் பயன்பாடு)
"https://ta.wiktionary.org/w/index.php?title=நபி&oldid=1986827" இலிருந்து மீள்விக்கப்பட்டது