பரணி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பரணி (பெ)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  1. பரணி: தமிழ்ச் சிற்றிலக்கியத்தில் ஒரு வகை. (இலக். வி. 839.)
  2. செப்பு
  3. சாடி. ((உள்ளூர் பயன்பாடு))
  4. சோதிட நட்சத்திரங்களுள், இரண்டாம் நட்சத்திரம் ஆகும்.
    • பரணிநாட் பிறந்தான் (சீவக. 1813)
  5. இரவின் பதினைந்து முகூர்த்தங்களுள் ஆறாவதான இராக்கதம். (விதான. குணாகுண. 73, உரை.)
  6. அடுப்பு. (தைலவ. தைல.)
  7. சிலந்திக்கூடு. (ஈடு, 7, 5, 10.)
  8. ஏரிமதகு
  9. கூத்து. (சது.)
  10. பரண். (W.)
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. Tamil literature: A poem about a hero who destroyed 1000 elephants in war
  2. casket, small box
  3. jar
  4. The second nakṣatra, part of Aries.
  5. The sixth of the 15 divisions of the night
  6. oven, fireplace
  7. A spider's web
  8. sluice of a tank
  9. dance
  10. watch tower


விளக்கம்
விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:

  • தமிழின் முதல் பரணி, கலிங்கத்துப் பரணியே ஆகும்.
பயன்பாடு
  • 96வகைப்பட்ட பிரபந்தங்களுள், பரணியும் ஒன்றாகும்.

(இலக்கியப் பயன்பாடு)

  • 21. சூதள வளவெனு மிளமுலைத் துடியள வளவெனு நுண்ணிடைக்
காதள வளவெனு மதர்விழிக் கடலமு தனையவர் திறமினோ. 1
மார்பழகு(தாழிசையிலமைந்த கலிங்கத்துப் பரணி)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---பரணி--- DDSA பதிப்பு + வின்சுலோ + தமிழ்ப் பேரகரமுதலி,தமிழ் இணையப் பல்கலைக் கழகம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=பரணி&oldid=1971156" இலிருந்து மீள்விக்கப்பட்டது