பேச்சு:கொத்தமல்லி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

சந்தேகம்[தொகு]

Coriander என்பது கொத்துமல்லியா அல்லது கொத்தமல்லியா ? --Santhoshguru 17:02, 18 மார்ச் 2008 (UTC)

நண்பரே

1.க்ரியாஅகராதி கொத்தமல்லி என்றே குறிப்பிடுகிறது.

"க்ரியா" அகராதியை நம்புவது பெரும் பிழையாக முடியும். தவறானவை அதில் மிக நிறைய உள்ளது. கொத்துமல்லி என்பது சரியானது. (நீங்கள் சுட்டும் அந்த அகராதியில் "முயற்சிக்கிறேன்" என்பது போன்றவை சரியான வழக்கு என்று தருவதுமல்லாமல் முயற்சி என்பதை ஏவல் வினையாகவும் தந்திருக்கும் அறியாமையை உடைய அகராதி. தமிழ் மரபும், தமிழ் முறைமையும், இலக்கணமும், தமிழ் நலமும் அறியா அகராதி. அதில் நான் போற்றும் பல அறிஞர்களும் பங்களித்ததாக உள்ளதைக் கண்டு ஏமாறாதீர்கள்).--செல்வா 17:49, 22 மார்ச் 2008 (UTC)

2. தமிழகத்தின் பல இடங்களிலும் தமிழர் இங்ஙனமே அழைக்கின்றனர்.

எப்படி அழைக்கிறார்கள் என்பது பல்வேறுவிதாக இருக்கும். ஆங்கிலத்திலும் ஒவ்வொரு சொல்லையும் ஒவ்வொருவர் ஒரு விதமாக அழைப்பர். எது சரியான சொல் என்று தருவது அகராதி.--செல்வா 17:49, 22 மார்ச் 2008 (UTC)

3. கொத்த (த(த்+அ))

கொத்து (து(த்+உ))
மல்லி (ம(ம்+அ))
மல்லியின் 'அ' , புணர்ச்சி இலக்கணப்படி கொத்தவில் வருகிறது என்றும் கூறுவர்.

4.செந்தமிழும் நாப்பழக்கம் அல்லவா? வேகமாக 'கொத்துமல்லி' என்று சொல்லுங்கள். 'கொத்தமல்லி' தானக வரும்.தகவலுழவன் 05:19, 21 மார்ச் 2008 (UTC)

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:கொத்தமல்லி&oldid=163925" இலிருந்து மீள்விக்கப்பட்டது