பேச்சு:absolutely continuous function/version2

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

1.{.{சமக்குறியீடுள்ளஒலிப்பு}}-->{.{ஒலிப்பு1}}இப்படி இட்டாலே கீழ்கண்டபடிவரும்.

ஒலிப்பு

1.1ஒலிப்புக்குரியவற்றினை இப்பொழுது இருப்பது போலவே இடுதலால், தேடுபொறிகளில் பெரிய மாறுபாடு ஒன்றுமில்லை.பல ஆங்கில தளங்களில் ஒலிப்புதான் முதலில் இருக்கிறது. இருப்பினும், தேடுபொறிகளில் பொருள் தெரிகிறது. கற்றலில் கூட, ஒலிப்புதான் முதல் இடம். ஒலிவடிவத்தில் இருக்கும் பல சொற்களுக்கு வரி வடிவம் இல்லாமல் பல மொழிகள் இருக்கிறது. இது இயற்கையான கற்றலுக்கு முரணானது என்பதே என் எண்ணம்.மேலும், இந்நோக்கம் விரிவான ஆய்வுகளை உள்ளடக்கியுள்ளதாக இருக்கிறது.

2.பொருள் பகுதியில் பக்கப்பெயரை இணைத்தல்

மேற்கூறிய இரண்டினையும் பயன்படுத்துவதில் அனைவருக்கும் உடன்பாடு இருக்கிறது.

3.தேடுபொறிகளில் தேடி எடுத்தலே ஒரு கலைதான்.தேடுபொறிகள் பலவகைஇருக்கும் போது, மாறுபடும் போது நமது அமைப்பும் மாறுபடுமென எண்ணுகிறேன்.நீங்களும் தெரன்சும் இது பற்றி முன்னர் முதற்பக்கத்தில் ஏற்படுத்திய மாற்றங்கள் மிகுந்த பலனைத்தருகிறது. அகராதி அல்லது அகரமுதலி என்று எழுதிவிட்டு ஆங்கிலச்சொல்லை இட்டால், அது நம் தமிழ்விக்சனரியை மட்டும் காட்டுகிறது.மகிழ்ந்தேன்.

(எ. கா.) அகராதி absolutely என்று, கூகுளில் இட்டு பார்த்தேன் அது அதன் பொருளைக் காட்டவில்லை. பக்கத்தில் இல்லாதவற்றைக் காட்டுகிறது.தேடு பொறியில் எளிமையாக, ஆங்கில விக்சனரியை அடையும் வழி புலப்படவில்லை.

4.நம்தளம் வராமலே ,தேடுபொறியோடு போய்விட்டால் நமக்கு hit எப்படி கிடைக்கும்?இதிலுள்ள பல்லூடக வசதிகளை எப்படி அவர் அறிவர்?

5.நீங்கள் முழுமனதுடன் இப்பக்கவடிவத்தை மேம்படுத்தினால் எதிர்காலத்திற்கு சிறப்பாக இருக்கும்.

6.உங்கள் வடிவத்தோடு dado, dado2 மொத்தம் இதுவரை 3 வடிவங்கள் உள்ளன.சுந்தர், மாகிர் போன்றவரும் வடிவத்தைக் கூற வாய்ப்புள்ளது.

7.பலரும் உடன்பட்டிருப்பதால் சோதனை-1ஐ பதிவேற்ற உள்ளேன். ஒரு முறையில் முழுமையான இலக்கை அடையமுடியாதென்பது எனது எண்ணம்.ஒவ்வொரு வருடமும் இதுபற்றி கலந்துரையாடப்படவேண்டும்.


8.இவ்வடிவத்தை இதற்கு முன் உள்ள சொற்களுக்கு இற்றைப்படுத்த மாட்டேன். இதைவிட சிறப்பாக அடுத்தவருடமோ அடுத்து வருபவரோ செய்வர் என்ற நம்பிக்கையில் இதோடு இது பற்றி முடித்துக் கொள்கிறேன். உங்களின் கருத்துகளை முன் வைத்ததற்கு மிக்க நன்றி. இதனை மேலும் வளர்த்திட வேண்டுகிறேன்.

  1. --த*உழவன் 20:54, 14 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]
  2. --பழ.கந்தசாமி 01:30, 15 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

2. //மேற்கூறிய இரண்டினையும் பயன்படுத்துவதில் அனைவருக்கும் உடன்பாடு இருக்கிறது.//

பொருள் பகுதியில் தலைப்புச் சொல் இடல், ஒலிப்புக் கோப்பை நிறப்பட்டைப் பகுதியாக பிரிப்பது ஆகிய இரண்டுக்குமா? அப்படி என்றால் சரி?

3. த.உழவன், தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள். நான் தேடுபொறி உகப்பாக்கத் துறை குறித்து ஆண்டுக் கணக்கில் பின்பற்றி, முழு நேரத் தொழிலாகவே செய்து வருகிறேன். ஒன்றோடொன்று என்று பல விசயங்கள் சேர்ந்து தான் நாம் எதிர்பார்க்கும் விளைவுகள் வரும். அவற்றில் முக்கியமானவற்றை மட்டுமே சுட்டிக்காட்டினேன். மருத்துவர் கொடுக்கும் மருந்து வேலை செய்யுமா என்று கூட அவரிடம் வாதிடலாம். எத்துறையிலும், மேம்போக்காக சில விசயங்களை வைத்து நாம் எடுக்கக்கூடிய முடிவுகள் தவறாகக் கூட இருக்கலாம்.

4. எல்லாரும் நமது தளத்துக்கு வந்து தான் படிக்க வேண்டும் என்ற எண்ணப்பாட்டைத் தாண்டி வலையுலகம் முன்னேறி விட்டது. தேடுபொறிகள், இறுவட்டுகள், செயலிகள், நூல்கள் என்று எப்படி நமது தளத்தை அணுகினாலும் சிறந்த பயனெளிமையை அளிக்க வேண்டும். தேடுபொறியில் காட்டப்படும் விளக்கம் தெளிவாக, பயனுள்ளதாக, புரிகிற மாதிரி இருந்தால் தான் அதனைச் சொடுக்கி நமது தளத்துக்கே வருவார்கள். இல்லாவிட்டால், வேறு தளத்துக்குச் செல்வார்கள்.

5. இப்போது அரை மனதுடன் இருக்கிறேன் என்கிறீர்களா :)

7, 8. கொஞ்சம் தெளிவுபடுத்த வேண்டுகிறேன்.

  • 7.பற்றி.. இன்றைய அளவில் பலருக்கும் பல்வேறு சூழல் காரணமாக, இவ்வடிவத்தை மேம்படுத்த முடியவில்லையென்றே எண்ணுகிறேன்.அந்த நன்வடிவத்தை அடைவதற்கு முன், இது போன்ற தற்காலிக வடிவநிலையைத் தாண்டியே செல்ல வேண்டியதாக உள்ளது.
8. பற்றி எனவே தொடர்ந்து தற்போது கூறிய வடிவத்தை மேம்படுத்துங்கள். கொடியை வலப்பக்கம் நகர்த்துதல்,...பல சோதனைச் சொற்களை உருவாக்கி, தேடுபொறிகள் மூலம் கிடைக்கும் நன்மைகள் பற்றிய தெளிவுரைகள் கூறினால் என்னைப்போன்ற சாதாரண எழுத்துப்பணியைச் செய்யும் ஆர்வலர் எளிமையாக புரிந்து கொள்வர். அந்நன்னிலையை அடையும் வரை, நம் விக்சனரியில் உள்ள அனைத்துச் சொற்களிலும் தற்பொழுது பதிவேற்றும் வடிவத்திற்கு மாற்ற எனக்குள் தயக்கம் என்ற பொருளிலே உரைத்தேன்.

9. உங்களைப் போன்றே நானும் வடிவத்தை, இதுவரை கிடைத்த அனுபவத்தின் மூலம் இந்த சீனச் சொல் இருப்பது போல,(குறிப்பாக கொடியை) வடிவமைக்க எண்ணுகிறேன். இப்பொழுதுள்ள கொடி வரியில் அந்த பட்டை அழகாக இருக்கிறது. ஆனால், ஒன்றுக்கும் மேற்பட்ட கொடிகள் ஏன்?.. முன்பு இதுபோல வரிசையாக இல்லாமல் கொடிகளை, இதைப்போல அசைப்படமாக உருவாக்கினேன். இத்தளத்தில் கொடிகள், பல்வேறு மொழிகளைத் தருகின்றன. ஆனால், இங்கு?எனவே, கொடிப்பயன்பாட்டி னை இப்பொழுது, இது போல மட்டுமே பயன்படுத்த வேண்டுமென்பது எனது தனிப்பட்ட எண்ணம்.

தற்பொழுது தமிழ்விக்சனரியின் வளர்ச்சிக்காக உழைப்பவர் பதிவேறவுள்ள வடிவத்தை விரும்புவதால் எனது தனிப்பட்ட எண்ணங்களை ஓரங்கட்டி விட்டு அவர்களுக்காக நானும், பெரியண்ணனும், பழ.கந்தசாமியும் கைகொடுக்கிறோம். உங்களைப் போன்றே நானும் குறுகிய காலத்தில், அனுபவங்களை எடுத்துரைக்க வேண்டிய நிலை இருப்பதால் சற்று பின்வாங்குகிறேன். ஏதேனும் என் எண்ண வெளிப்பாட்டில் பிழையிருப்பின் பொறுக்கவும். நன்றி. வணக்கம்.{{--த*உழவன் 02:34, 16 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]


  • வார்ப்புரு:வரியமை என்பதற்குப் பதில் வார்ப்புரு:பயன்பாடு பயன்படுத்துவது.
  • பொருள் பகுதியில் தலைப்புச் சொல் இடுவது

ஆகிய இரு மாற்றங்களைச் செய்வீர்கள் என எதிர்பார்க்கிறேன். இதற்கு யாரும் மறுப்பு தெரிவிக்கவில்லை.

கூடவே, ஒலிப்புப் பகுதிக்கும் தலைப்பிட்டால் நல்லது. நன்றி--ரவி 05:25, 15 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

நன்றிங்க. தலைப்புச் சொல்லை பொருள் பகுதியில் மட்டும் கொடுத்தால் போதுமானது.--ரவி 04:14, 16 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:absolutely_continuous_function/version2&oldid=801183" இலிருந்து மீள்விக்கப்பட்டது