பேச்சு:trivia

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கில விக்கியில் இதனை information that is nice to have but not essential என்றும் information of the kind useful almost exclusively for answering quiz questions என்றும் குறிப்பிட்டுள்ளார்கள். இந்த பொருளை கொடுத்துள்ள சொல் தெரிவிக்கவில்லை. தமிழ் இணையத்தில் "மொக்கை" என்று பரவலாக அழைக்கப்படுகிறது. மேல்தகவல், பயனில்தகவல்,கூடுதல் சுவைக்குறிப்புகள் என்பதைப் போன்ற சொற்கள் சரியாக இருக்கும் என்று கருதுகிறேன். விக்சனரி அறிஞர்கள் தகுந்த சொல்லை ஆய்ந்து வழங்க வேண்டுகிறேன்.

மேலும் இதன் ஒருமையான trivium என்ற சொல்லிற்கும் பொருள் தர வேண்டுகிறேன்.

துணுக்கு, துணுக்குச் செய்திகள், (அல்லது அறிவுத் துணுக்கு, செய்தித்துணுக்கு. சில தனிப்பட்ட சூழல்களில் திரைப்படத் துணுக்கு, வணிகத்துணுக்கு என்றும் சொல்லலாம்); இணுக்குச் செய்திகள், இணுக்குக்குறிப்புகள், சிறுகுறிப்புகள் இப்படி. துணுக்கு, இணுக்கு போன்ற சொற்கள் தனித்தே வழங்கினும் சூழல்சார்ந்த புதுப்பொருள்கள் அவற்றுக்கு ஏற்படலாம். இச்சொல்லுக்கு அதிக நேரம் செலவழிக்கத் தேவை இல்லை (இதுவே பயன் அருகிய செய்தித்துளி என்பது :), ஆனால் சிறியது என்பதைக் கூறிக்கும் பற்பல தமிழ்ச் சொற்களில் ஒன்றைத் தக்கவாறு மாற்றி வழங்கும் திறமும் வழியும் தமிழில் உண்டு. செய் என்பது செய்தி என்று ஆவது போல information என்பதை, ஒன்றைக் குறிப்பதை அல்லது ஒரு குறிப்பு தாங்கிய ஒன்று என்பதால் குறிதி (குறிக்கும் ஒன்று) என்று துணிந்து சொல்லாக்கிப் பயன்படுத்தலாம். அரிசி என்பது அரி என்றால் சிறியது என்பதில் இருந்து உருவான சொல். எனவே சிறியது சிறிசி (சிறுபோக்கு உடையவளைச் சாடும் முகமாகக் கடுமையாகக் கூறுவது சிறுக்கி), சிறுமையானது சிறுசி, துணுசி, குறுசி, துளிசி என்றெல்லாம் சொற்கள் ஆக்கலாம். ஆனால் ஓரளவுக்கு பொருத்தமாகவும், சொற்களின் இயல்பு அறிந்தும் அவற்றின் நுட்ப சுட்டுகள் தன்னியல்பாய் இருப்பனவற்றையும் அறிந்து தக்க சூழல்களில் ஆக்கிப் பயன்படுத்தலாம். எதிர்க்கருத்துகள், மாற்றுக்கருத்துகள், மறுப்புரைகள் இருந்தால் நேர்மையான முறையில் உரையாடி வேண்டியவாறு செதுக்கிக்கொள்ளலாம். தமிழில் சொல்லாக்கம் என்பதை 2500 ஆன்ண்டுகளாக திறம்பட செய்து வந்திருக்கின்றார்கள் என்றே நினைக்க வேண்டியிருப்பதால், அவ்வழி வந்த நாம் பொறுப்புடன், முறைசார்ந்து பல்லாயிரம் ஆக்கலாம். --செல்வா 15:59, 6 ஆகஸ்ட் 2010 (UTC)
துளிக்குறிப்பு என்னும் சொல்லையும் சேர்த்திருக்கின்றேன். சொற்பொருளை விளக்கி இருக்கின்றேன்.--செல்வா 16:07, 6 ஆகஸ்ட் 2010 (UTC)

கொசுறு என்பதையும் சேர்க்கலாம் என்றுதான் நினைத்தேன். கொசுறு என்பது பொதுவாக எதையாவது வாங்கும்பொழுது வாங்கும் பொருளைத் துளியூண்டு கூடுதலாக சேர்த்துத் தருவது என்னும் பொருளில்தான் வழங்கி வந்தது. ஆனால் அண்மைக் காலத்தில் கொசுறு என்பது துணுக்குச் செய்திகள் என்னும் புதுப் பொருள் பெற்று வழங்குவதை நாம் அனைவரும் அறிவோம். இவையும், சொல்லவேண்டியவற்றைச் சொன்ன பிறகு கூடுதலாகச் சொல்லும் சிறு துணுக்குச் செய்திகள். ஆகவே இப்பொருளில் பழ. கந்தசாமி இச்சொல்லைச் சேர்த்திருப்பது பாராட்டுக்குறியது. --செல்வா 17:35, 6 ஆகஸ்ட் 2010 (UTC)

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:trivia&oldid=775764" இலிருந்து மீள்விக்கப்பட்டது