வழிநூல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

வழிநூல், பெயர்ச்சொல்.

  • நூல் மூவகையுள் முதல்நூலின் முடிபைப் பெரும்பான்மையொத்துச் சிறுபான்மை மாறுபடும் நூல். (தொல்.பொ. 650.)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
  • வழிநூல் = வழி + நூல்
  • முதல் நூல், வழிநூல் என மரபுநிலை திரியாது சிறப்போடு கூடிய நூல்வகை இரண்டாகும். செய்த வினையின் பயனை அடையாத, தூய ஆழமான அறிவுடைய முன்னோன் ஒருவனால் செய்யப்பட்டது முதல் நூலாகும். அதன் வழியில் வருவது வழிநூலாகும் என்கிறது தொல்காப்பியம் (1593-94-95)
  • வழிநூல் என்பது, முதல் நூலில் உள்ள கருத்துகளைத் தொகுத்து நூலாக்கல், விரித்து நூலாக்கல், தொகுத்தும் விரித்தலும் மற்றும் மொழி பெயர்த்தலுமாம் (தொல். பொரு.1597) என்று கூறியுள்ளார் தொல்காப்பியர். ("நூல்' - இலக்கண விளக்கம்!, தமிழ்மணி, 22 மே 2011)
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
  • ...
முதல் - நூல் - முதல்நூல் - உரை - நூற்பா - காண்டிகை - #


( மொழிகள் )

சான்றுகள் ---வழிநூல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=வழிநூல்&oldid=949824" இலிருந்து மீள்விக்கப்பட்டது