வாய்மை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

வாய்மை, பெயர்ச்சொல்.

  1. சொல்
  2. தப்பாத மொழி
  3. உண்மை
  4. வலிமை
  5. துக்கம். துக்கோற்பத்தி துக்கநிவாரணம் துக்கநிவாரணமார்க்கம் என நால்வகைப்பட்ட பௌத்தமத உண்மைகள்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. word
  2. ever-truthful word
  3. truth
  4. strength
  5. (Buddh.) sublime truths, numbering four
விளக்கம்
வாய்வழி வருவது வாய்மை.
மெய்யால் (உடலால்) செயற்படுவது மெய்ம்மை

(பிழையின்றித் தமிழ் பேசுவோம்-எழுதுவோம்! கவிக்கோ ஞானச்செல்வன், தினமணிக்கதிர், 29 மே 2011)

பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
  • சேரமான் வாரா யெனவழைத்த வாய்மையும்(தனிப்பா. i, 97, 19.)
  • பொருப்பன் வாய்மை யன்ன வைகலொடு (கலித். 35).
  • வாய்மையெனப் படுவ தியாதெனின் (குறள், 291).
  • ஒன்றிய வுரையே வாய்மை நான்காவது (மணி. 30, 188).
(இலக்கணப் பயன்பாடு)
வாய் - உண்மை - மெய்ம்மை - நேர்மை - # - # - #


( மொழிகள் )

சான்றுகள் ---வாய்மை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=வாய்மை&oldid=1643545" இலிருந்து மீள்விக்கப்பட்டது