வாரசூலை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
சிவனின் திரிசூலம்}
சிவபெருமான் சூலாயுதத்தோடு

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

வாரசூலை, பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. வார நாட்களில் பயணிக்கக்கூடாத திசைகள்.

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. directions in week days towards which journeys should be avoided, according to the hindu belief.such directions are indicated by the position of lord shiv's trident on that day.

விளக்கம்[தொகு]

  • வாரசூலை என்பது வாரத்தின் ஒவ்வொரு நாளும் சிவபெருமானின் கரத்திலுள்ள சூலாயுதம் சுட்டிக்காட்டும் திசையாகும்..இந்துக்களின் நம்பிக்கையின்படி அவ்வாறு சிவனின் சூலம் காண்பிக்கும் திசையில் பயணிக்கக் கூடாது...அந்தக் குறிப்புகளை வாரசூலை என்பர்...அதன்படி திங்கள், சனிக்கிழமைகளில் கிழக்கு திசை,செவ்வாய், புதனில் வடக்கு, வியாழனில் தெற்கு,வெள்ளி, ஞாயிறில் மேற்கு திசைகளில் சூலை இருக்குமாதலால் அந்தந்த நாட்களில் குறிப்பிட்ட திசையில் பயணம் செய்யக்கூடாது...சூலை எனில் நோய் மற்றும் துன்பம் எனப்பொருள்...தவிர்க்கமுடியாதக் காரணங்களால் பயணிக்க நேரிட்டால் திங்கள், சனியில் எட்டு நாழிகை, செவ்வாய், புதனில் பதினொன்று நாழிகை, வியாழன் இருபது நாழிகை, வெள்ளி, ஞாயிறில் பன்னியிரண்டு நாழிகை கழித்து தயிர் சாதம் சாப்பிட்டுவிட்டு போகலாம் என்பது விதிவிலக்காகும்...நாழிகை என்பது இருபத்துநான்கு நிமிடங்களாகும்...சூரியோதயத்திலிருந்துதான் இந்துக்களின் கணக்குப்படி நாள் துவங்குகிறது...நடு இரவு பன்னியிரண்டு மணியிலிருந்து அல்ல...ஆகவே நாழிகையை சூரியோதயத்திலிருந்தே கணக்கிடல் வேண்டும்...


( மொழிகள் )

சான்றுகள் ---வாரசூலை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=வாரசூலை&oldid=1221739" இலிருந்து மீள்விக்கப்பட்டது