விக்சனரி:புதுப் பயனர் பக்கம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

புதுப் பயனர்கள் தமிழ் விக்சனரிக்கு மேம்பட்ட பங்களிப்புகளை வழங்குவதற்கு உதவும் குறிப்புகள் இப்பக்கத்தில் இடம்பெற்றுள்ளன.

விக்சனரியில் தேடல்[தொகு]

விக்சனரியில், சொற்களைத் தேட இடப்பக்கம் உள்ள தேடல் பெட்டியைப் பயன்படுத்துங்கள். செல் பொத்தானை பயன்படுத்துவதன் மூலம், நேரடியாக அச்சொல்லுக்கானப் பக்கத்திற்குச் செல்ல முடியும். சொல்லுக்கான தனிப்பக்கம் இன்னும் உருவாக்கப்படவில்லையெனில், அச்சொல் இடம்பெறும் பிற பக்கங்கள் தேடல் முடிவுகளில் வரும். கூகுல் போன்ற தேடு பொறிகளில் இருந்து தமிழ் விக்சனரியில் உள்ள சொற்களைத் தேட தேடல்சொல் தமிழ் என்பது போன்ற குறிச்சொல்லைப் பயன்படுத்தவும். எடுத்துக்காட்டாக, contest என்ற சொல்லுக்கான பொருளைக் கூகுலில் இருந்து தேட contest தமிழ் என்று தேடவும்.

சொற்களைச் சேர்த்தல்[தொகு]

முதலில், விக்சனரியில் புதிதாகச் சொற்களைச் சேர்ப்பது எப்படி என்று அறிவோம்.


Wiktionary:புதிய பக்கத்தை உருவாக்குதல் என்ற பக்கத்தில் உள்ள படிவங்களைக் கொண்டு புதிய சொற்களை விக்சனரியில் சேர்க்கலாம். ஆங்கிலப் பெயர்ச்சொற்கள், ஆங்கில வினைச் சொற்கள், ஆங்கில உரிச்சொற்கள், தமிழ்ச் சொற்கள் ஆகியவற்றைச் சேர்க்கத் தனித்தனியே படிவங்கள் உள்ளன. பொருத்தமான படிவத்தைப் பயன்படுத்தி நீங்கள் சொற்களைச் சேர்க்கலாம்.


எடுத்துக்காட்டுக்கு, ஆங்கிலப் பெயர்ச்சொல் படிவத்தை எப்படிப் பயன்படுத்துவது என்று பார்ப்போம். பின் வரும் படிவத்தில் ஏதேனும் ஓர் ஆங்கிலப் பெயர்ச்சொல்லை உள்ளிடவும். எடுத்துக்காட்டுக்கு, sofa என்று உள்ளிட்டு create என்று பொத்தானை அழுத்தவும்.


new english word
noun:


மேலே கூறியவாறு பொத்தானை அழுத்தியதும், கீழே உள்ளது போன்று தொகுத்தல் பக்கம் வரும்.


==ஆங்கிலம்==

===பலுக்கல்===

* [[பலுக்கல் (ஐ.அ)]]

===பெயர்ச்சொல்===
'''{{PAGENAME}}'''
# [[]]

இதில்,

==ஆங்கிலம்==

===பலுக்கல்===

* [[பலுக்கல் (ஐ.அ)]]

===பெயர்ச்சொல்===
'''{{PAGENAME}}'''

என்பது வரையான விடயங்களை நீங்கள் மறந்து விடலாம் :)


இவை அனைத்து ஆங்கிலப் பெயர்ச்சொல் பக்கங்களுக்கும் பொதுவானவை. நீங்கள் சேர்க்க விரும்பும் சொற் பொருளை # [[]] என்று உள்ள வரியில் பின்வருமாறு சேர்க்க வேண்டும்.


எடுத்துக்காட்டுக்கு, sofa என்ற சொல்லுக்கு மெத்தை என்று நீங்கள் தமிழாக்கம் செய்ய விரும்பினால், # [[மெத்தை]] என்று எழுதுங்கள். இதன் மூலம் மெத்தை என்ற தமிழ்ச் சொல்லுக்கான இணைப்பு ஒன்று உருவாக்கப்படுவதுடன், அது sofa என்ற சொல்லுக்கான தமிழாக்கமாகவும் இங்குப் பதியப்படுகிறது. ஒன்றுக்கு மேற்பட்ட ஒத்த சொற்கள், விளக்கங்களை ஒரே வரியில் சேர்க்கவும். எடுத்துக்காட்டுக்கு, இருக்கை என்ற இன்னொரு ஒத்த சொல்லையும் நீங்கள் சேர்க்க விரும்பினால்

# [[மெத்தை]], [[இருக்கை]]] என்று ஒரே வரியில் எழுதுங்கள்.


ஒரே ஆங்கிலச்சொல்லுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பொருள் இருந்தால் அவற்றை அடுத்தடுத்த வரிகளில் எழுதுங்கள். எடுத்துக்காட்டுக்கு, base என்ற சொல்லுக்குக் காரம், அடித்தளம் என ஒன்றுக்கு மேற்பட்ட பொருள் இருப்பதால் அவற்றைப் பின்வருமாறு எழுத வேண்டும்.


# [[காரம்]]
# [[அடித்தளம்]]


இங்கு நீங்கள் அறிய வேண்டியது # என்ற குறி தானாக வரிசை எண்களைச் சேர்க்கவும், [[]] என்ற குறிகளுக்குள் அடைபடும் சொற்கள் அத்தலைப்பிலான பக்கங்களுக்கு இணைப்புகளாகவும் செயல்படும் என்பதாகும்.

அனைத்து ஆங்கிலச் சொற்களுக்கும் ஒற்றை தமிழ்ச் சொல்லில் தமிழாக்கமோ, விளக்கமோ தர வேண்டும் என அவசியமில்லை. அது சாத்தியமுமில்லை. எனவே, பொருத்தமான இடங்களில் சொற்றொடர்களைக் கொண்டு பொருளை விளக்கலாம். இப்படி சொற்றொடர்களைக் கொண்டு விளக்கும்போது முழுச்சொற்றொடரையும் [[]] குறிக்குள் அடக்குவது பிழையாகும். [[]] குறிகளுக்குள் பொருத்தமான ஒற்றைச் சொற்களை மட்டுமே அடைக்க வேண்டும் என்பதை மனதில் கொள்க.

எடுத்துக்காட்டுக்கு, cousin என்ற பக்கம் பின்வருமாறு இருப்பதை பாருங்கள்.

# [[தாய்]] அல்லது [[தந்தை]]யின் உடன் பிறந்தவர்களின் (அல்லது அந்த முறை வரும் உறவினர்களின்) [[பிள்ளை]]கள்.

[[]] அடைப்புக்குறிகளைப் பற்றி இங்கு மேலும் சில எடுத்துக்காட்டுக்களைத் தருவது அவசியம்.

1. [[அக்கா]] என்று எழுதினால் அக்கா என்று காண்பிக்கும். இணைப்பைச் சொடுக்கினால், அக்கா என்ற பக்கத்துக்கு இட்டுச்செல்லும்.

2. [[அக்கா]]வின் என்று எழுதினால் அக்காவின் என்று காண்பிக்கும். இணைப்பைச் சொடுக்கினால், அக்கா என்ற பக்கத்துக்கு இட்டுச்செல்லும்.

3. [[உடல் நலம்]] என்று எழுதினால் உடல் நலம் என்று காண்பிக்கும். இணைப்பைச் சொடுக்கினால், உடல் நலம் என்ற பக்கத்துக்கு இட்டுச்செல்லும்.

4. [[உடல் நலம்|உடல் நலமுடன்]] என்று எழுதினால் உடல் நலமுடன் என்று காண்பிக்கும். இணைப்பைச் சொடுக்கினால், உடல் நலம் என்ற பக்கத்துக்கு இட்டுச்செல்லும்.


பொதுவாக, இட்டுச் செல்லப்படும் பக்கங்களை ஒற்றை அல்லது கூட்டுச் சொற்களாகவும், முழுச் சொற்களாகவும் வேற்றுமை உருபுகள் இல்லாமல் இருக்குமாறும் பார்த்துக் கொள்வது பரிந்துரைக்கப்படுகிறது. [[அம்மாவின்]], [[குற்றமற்ற]] என்பது போன்று இணைப்புகளை தருவது பிழை. மாறாக, [[அம்மா]]வின், [[குற்றம்|குற்றமற்ற]] என்று தருவது சரியாகும்.


ஒரே ஆங்கிலச் சொல் பெயர்ச்சொல், வினைச்சொல், உரிச்சொல் என்று பலவகைப்படும்பொழுது அவற்றுக்குப் பொருத்தமான படிவங்களை Wiktionary:புதிய பக்கத்தை உருவாக்குதல் என்ற பக்கத்தில் இருந்து பயன்படுத்துங்கள். அல்லது,

===வினைச்சொல்===
'''{{PAGENAME}}'''
# [[]]

என்பது போன்று, ஏற்கனவே உள்ள பெயர்ச்சொல் பக்கங்களின் கீழ் ஒட்டி வினைச்சொல் அல்லது உரிச்சொற்களை சேர்க்கத் தொடங்குங்கள்.

விக்சனரி பக்க மரபுகள்[தொகு]

ஒரு சொல், எச்சொல் வகையாக அதிகம் பயன்படுகிறதோ அச்சொல் வகையைப் பக்கத்தின் தொடக்கத்தில் தாருங்கள். எடுத்துக்காட்டாக, bite என்பது பெயர்ச்சொல் இருந்தாலும், அது வினைச்சொல்லாக அதிகம் பயன்படக்கூடும். எனவே, bite பக்கத்தின் தொடக்கத்தில் வினைச்சொல்லைத் தாருங்கள். இதே போன்று, சொற்களுக்கான வெவ்வேறு பொருட்களைத் தரும்பொழுதும் பெரிதும் பயன்படுத்தப்படும் பொருள்களை முதலிலேயே தந்துவிடுங்கள். அரிய பொருள்களைப் பட்டியலின் இறுதியில் தாருங்கள். ஒரு சொல்லுக்கான பொருள் பேச்சு வழக்காகவோ சில நாடுகளில் மட்டுமோ பயன்படுவதாகவோ இருந்தால் அவற்றையும் குறிப்பிடுங்கள். எடுத்துக்காட்டுக்கு, guy பக்கத்தைப் பாருங்கள்.

ஒரே அடிச்சொல்லில் இருந்து உருவாகும் சொலவடைகள், உரிச்சொற்கள், பெயர்ச்சொற்கள் ஆகியவற்றிற்குத் தனித்தனிப் பக்கங்களை உருவாக்குங்கள். எடுத்துக்காட்டாக babier என்ற உரிச்சொல்லுக்கான பொருளையோ baby sitter என்பதற்கான பொருளையோ baby என்ற பெயர்ச்சொல் பக்கத்தில் தர வேண்டாம். ஒரு சொல் ஒரு பக்கம் என்பதை மனத்தில் கொள்ளுங்கள். சொற்கள் தவிர சொல்வடைகள்(Idioms), phrases ஆகியவற்றையும் விக்சனரியில் சேர்க்கலாம். பக்கங்களை ஒருமைச்சொல் கொண்டு தொடங்கவும். பன்மைச் சொல் தலைப்புக்களைத் தவிர்க்கவும்.

ஆங்கிலப் பக்கங்களுக்கான சொற்களை உருவாக்கப் படிவங்களை பயன்படுத்தும்போது முதல் எழுத்து உள்ளிட்ட அனைத்து எழுத்துக்களையும் சிற்றெழுத்துக்களிலேயே எழுதுவது மிகவும் தேவையாகும். தொழில்நுட்பக் காரணங்களுக்காகவும் மொழியியல் காரணங்களுக்காகவும் இது அவசியமாகிறது. ஆங்கிலச் சொற்களை ஒத்த spelling உடைய சில செருமன் சொற்கள் பெரிய எழுத்துகளில் தொடங்குவதுடன் வேறுபட்ட பொருளைக் கொண்டுள்ளன. எனவே, இச்சொற்களை வேறுபடுத்திக் காட்ட அனைத்து ஆங்கிலச் சொற்களையும் சிறு எழுத்துகளில் (தலைப்புகளில் மட்டும்) எழுதுவது கட்டாயமாகிறது. எடுத்துக்காட்டுக்கு art மற்றும் Art ஆகிய இரு பக்கங்களுக்கான வேறுபாடுகளைப் பாருங்கள்.

தமிழ் விக்சனரியில், தமிழ் உள்ளிட்ட எம்மொழிச் சொல்லுக்கும் தமிழில் விளக்கம் தருவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம் என்பதை மனத்தில் கொள்ளவும். எனவே, தமிழ்ச் சொற்களுக்கான பக்கங்களில் வெறும் ஆங்கிலச் சொல்லாக்கங்களை மட்டும் தருவது விரும்பத்தக்கதல்ல. எடுத்துக்காட்டாக, bite என்ற பக்கத்தில் கடி என்று பொருளும் கடி என்ற பக்கத்தில் bite என்ற ஆங்கில மொழிபெயர்ப்பும் மட்டும் தந்தால், தமிழ், ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளையும் சரியாக அறிந்திராத செருமன்(இடாய்ச்சு) வாழ் தமிழ் மக்கள் போன்றோர் தமிழ் விக்சனரியில் இருந்து அதிகப் பயன் பெற இயலாமல் போகக் கூடும். எனவே தமிழ்ச் சொற்களுக்கான பக்கங்களிலும் அச்சொல்லுக்கான பொருளைத் தமிழில் விளக்குவது மிகவும் இன்றியமையாததாகும்.

ஒரு சொல்லுக்கான பொருள், விளக்கம் ஆகியவற்றில் உங்களுக்கு மாற்றுக் கருத்துகள், ஐயங்கள் ஆகியன இருக்கும் நிலையில் அவற்றை ஒவ்வொரு பக்கத்துக்கும் இருக்கும் உரையாடல் பக்கங்களில் தெரியப்படுத்துங்கள்.

குறிப்பிட்ட பயனருக்குத் தகவல் சொல்ல, அவருடைய பேச்சுப் பக்கத்தில் எழுதுங்கள்.

அறிய வேண்டிய பக்கங்கள்[தொகு]

1. நீங்கள் அறிந்து கொண்டதைத் தொகுத்துப் பார்க்க, தொகுத்தலுக்கான பயிற்சிக் கூடம் செல்லவும்.

2. விக்சனரி பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை விக்சனரி:கலந்துரையாடல் பக்கத்தில் தெரியப்படுத்துங்கள்.

3. விக்சனரி குறித்த ஆலோசனைகள் மற்றும் கலந்துரையாடல்களுக்கு விக்சனரி:ஆலமரத்தடி பக்கத்தில் தெரியப்படுத்துங்கள்.

4. விக்சனரி தளத்தைப் பயன்படுத்துவது குறித்த உதவிகளுக்கு விக்சனரி:ஒத்தாசை பக்கம் பக்கத்தில் தெரியப்படுத்துங்கள்.

5. நீங்கள் பொருள் அறிய விரும்பும் சொற்கள் குறித்து விக்சனரி:கோரப்பட்ட சொற்கள் பக்கத்தில் தெரியப்படுத்துங்கள்.

6. மேலும் தகவல்கள் மற்றும் உதவிக்கு Wiktionary:சமுதாய வலைவாசல் மற்றும் உதவி:உள்ளடக்கம் ஆகிய பக்கங்களை பாருங்கள்.