பயனர்:Nan

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

நந்தகுமார் பிறந்த இடம் ஆம்பூர், தமிழ்நாடு. தற்பொழுது இணை பேராசிரியராக கரோலின்ஸ்கா மையம், சுவீடனில் உள்ளார். முன்பு லுண்ட் பல்கலைக்கழகம், சுவீடனிலும் (முடக்குவாதம் - ஆராய்ச்சி, 1998-2008), உயிரணு மற்றும் மூலக்கூற்று உயிரியல் மையம், அய்தராபாத், இந்தியாவிலும் (புற்று நோய் - எதிர்ப்பியல் ஆய்வு, 1996-1998) ஆராய்ச்சியாளராக இருந்தார்.

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திலும் (தமிழ்நாடு; முனைவர் , எதிர்ப்பியல் , 1989 — 1995, டைபாய்டு காய்ச்சல் - ஆராய்ச்சி) , லுண்ட் பல்கலைக்கழகத்திலும் (மருத்துவ முனைவர் , எதிர்ப்பியல்-மரபணுவியல் , 2002 — 2006) பட்டம் பெற்றவர். அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் ஆராய்ச்சி மாணவராக இருந்துவந்தார் (நிரப்புப்புரதங்கள் - ஆராய்ச்சி மாணவர் 1988 — 1989). சென்னைப்பல்கலைக்கழகத்தில் உயிர்வேதியலிலும் (1986 — 1988), வேதியலிலும் (1983 — 1986) அடிப்படை கல்வி கற்றவர்.

தற்போதைய ஆய்வு சுருக்கம்:எதிர்ப்பியல், அழற்சி மற்றும் மரபியல். விலங்குகளை (எலிகள்) பயன்படுத்தி நோய் மாதிரிகளை உருவாக்கி நோய் (முடக்குவாதம்) எதனால், எப்படி உருவாகிறது? அதனை தடுப்பதற்கான வழிமுறைகள் என்ன என்பதற்கான ஆராய்ச்சி. நோய்க்கு காரணமான குருதிக் கூறுகளின் இணைவு, நோய் வழிமுறை மற்றும் மரபணுக்களின் இணைவு, பங்களிப்பினை கண்டறிதல்.

தற்பொழுது பயன்பாட்டில் உள்ளவை: மூட்டு புரதங்கள் - ஒருமுனை மற்றும் பல்முனை எதிர்ப்பான்கள் - எலிகள் - மரபணு பட்டியலிடல் - மரபணு மாற்றம் செய்யப்பட எலிகள் - மூட்டு புரதத்தினால் உண்டாக்கப்பட்ட முடக்குவாதம் - மூட்டு புரத்திற்கு எதிரான ஒருமுனை எதிர்ப்பான்களால் உண்டாக்கப்பட்ட முடக்குவாதம் - உடனடி மற்றும் நாள்பட்ட நோய் - நிரப்புப்புரதங்கள், உயிரணு வாங்கிகள்.

படித்த/பணிபுரிந்த இடங்கள்[தொகு]

கரோலின்ஸ்கா மையம், ஸ்டாக்ஹோம், சுவீடன்

லுண்ட் பல்கலைக்கழகம், லுண்ட், சுவீடன்

செல் மற்றும் மூலக்கூறு ஆராய்ச்சி மையம், ஐதராபாத்_(இந்தியா)

மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை

அனைத்திந்திய மருத்துவக்கழகம், தில்லி

சென்னைப்பல்கலைக்கழகம், சென்னை

தூய நெஞ்சக்கல்லூரி, திருப்பத்தூர்

இந்து மேனிலைப்பள்ளி, ஆம்பூர்

நடேசன் கல்வி நிலையம், சாணாங்குப்பம்

இணைய தளங்கள்

குட்டி-செல்வ-நந்தகுமார்-இணைப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=பயனர்:Nan&oldid=1107572" இலிருந்து மீள்விக்கப்பட்டது