queer

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்

queer

  • விந்தையான
  • பால்புதுமையினர்
  • புதுமர்
விளக்கம்

எதிர்பாலீர்ப்பு கொள்ளாதோரையும், பிறப்பில் குறிக்கப்படும் பாலினத்தோடு அடையாளப்படுத்திக் கொள்பவர்களையும் குறிப்பிட பால்புதுமையர் அல்லது குயர் எனும் வார்த்தையை பயன்படுத்துகிறோம். ஆங்கிலத்தில் குயர் எனும் சொல் ஒரு “மீட்டெடுக்கப்பட்ட” சொல். கடந்த காலங்களில், சமூகத்தின் பாலின மற்றும் பாலீர்ப்பு எதிர்பார்ப்புக்கு ஒத்துவராதவர்களுக்கான வசைச்சொல்லாக இது இருந்தது. ஆனால் இப்போது LGBTIQA+ மக்கள் இதைத் தங்களுக்கானதாக மாற்றி, த ங்களை வ ரை யறுத்து க் கொள்வ த ற் கு ப் பயன்படுத்துகிறார்கள். மிகை பாலினம் மற்றும் எதிர் பாலீர்ப்பு சார்ந்த அடையாளங்கள் மற்றும் சிந்தனைகள் பழமைவாதத்தை மையப்படுத்தி இருக்கும் நிலையில் அதிலிருந்து நகர்ந்து அனைத்து பாலின பாலீர்ப்பு, பால்பண்பு அடையாளங்களையும் சிந்தனைகளையும் உள்ளடக்கி காலத்திற்கேற்ற புரிதலோடு தன்னைத் தானே புதுப்பித்துக் கொள்பவர் என்கிற அர்த்தத்தில் பால் புதுமையர் எனும் வார்த்தை தமிழில் பயன்படுத்தப்படுகிறது

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் queer
"https://ta.wiktionary.org/w/index.php?title=queer&oldid=1972464" இலிருந்து மீள்விக்கப்பட்டது