பேச்சு:அகராதி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

படத்தை நீக்கக் கோருகிறேன். இது ஏதோ விளம்பரம் போல் தெரிகின்றது. அகராதியின் உள்ளே சொற்களுக்கு எப்படிப் பொருள் தந்துள்ளார்கள் என்று படம் பிடித்துப் பதிவு செய்யலாம் (ஒரு சில அகராதிகளில் இருந்தும்) ஆனால் ஒரு குறிப்பிட்ட அகராதிக்கு விளம்பரம் போல் இருப்பதாக இப்படி செய்வது தவறு என்று நினைக்கிறேன்.--செல்வா 17:55, 22 மார்ச் 2008 (UTC)

அகரமுதலிகளில் சொற்பொருள் விளக்கம் எவ்வாறு தருகிறார்கள் என்று தருவது கூடுதல் பொருத்தம் என்று ஏற்றுக்கொள்கிறேன். அட்டைப்படத்தைத் தருவதில் தகவல் எதுவும் பயனருக்குக் கிடைப்பதில்லை. -- Sundar 03:42, 23 மார்ச் 2008 (UTC)

மறு மொழி[தொகு]

வாழ்ந்த தமிழை, வாழ வைப்போம்!

இந்நூல் பதிப்புரிமை செய்யப்பட்டதால், முகப்புத்தோற்றத்தினை மட்டுமே நிழற்படம் எடுத்தேன்.எந்தவித விளம்பர நோக்கமும் எனக்கில்லை.ஒரு சாதரணப் பயன்பாட்டாளனின் பார்வையே எனக்கு எப்பொழுதும் இருக்கும்.இந்நூல் இணையத்தினையும் தாண்டிய (மிகப் பெரிய அளவில்) பலரின் முயற்சியால், உருவாக்கப் பட்டது. இருப்பினும் விரைவில் மின்நூல்(சில பக்கங்கள்) எடுத்து, நம் குழுவுக்கு அனுப்ப ஆவணப் படுத்துகிறேன்.வணக்கம்.தகவலுழவன் 07:40, 30 மார்ச் 2008 (UTC)
தமிழ் மொழி, வாழ்மொழி ! அதாவது வாழ்ந்த, வாழ்கின்ற, வாழும் மொழி. வினைத்தொகை. "க்ரியா" அகராதியில் பெரிய அறிஞர்கள் பட்டியல் இருப்பது அறிவேன் (அவர்களுள் பலரும் நான் மிகவும் மதித்துப் போற்றுபவர்கள்), ஆனால் இந்த அகராதியின் குறைகளைக் கண்டு திருத்தாதது அவர்களின் புகழுக்கு குறைவும் இழுக்குமே தரும். நேர்மையான தேர்வுரைகள் இவை. இவ் அகராதியைப் பற்றி இங்கு உரையாடுவது பொருந்தாது. ஆகவே விட்டுவிடுவோம். உங்களைப் போலவே பலரும் இக்குறிப்பிட்ட அகராதியின் பால் நன்மதிப்பு வைத்திருப்பதையும் நான் நன்கு அறிவேன். இதே அகராதியில் இருந்து, நிங்கள் விரும்பினால், உள்ளே உள்ள இரு பக்கங்களைப் படி எடுத்து (copy செய்து) எப்படி ஒரு அகராதியில், சொற்களும் அதற்கான பொருள்களும் தருகின்றார்கள் என்று காட்டுங்கள். அத்தகைய படங்களே பயனுடையதாக இருக்கும். அட்டைப் படத்தால் பயன் இல்லை. நடுநிலைமை கருதி, இரண்டு அகராதிகளில் இருந்து எடுத்து இடுவது நல்லது. கடைசியாக விளம்பர நோக்கம் என்று படம் இட்டு ஆக்கம் தர முயன்ற உங்களைக் குறை கூறுவதாக எண்ண வேண்டாம். ஆனால் நீங்கள் இந்த அகராதியின் மேல் அதிக மதிப்பு கொண்டு இருக்கின்றீர்கள் என்பதும், நான் குறைந்த மதிப்பு வைத்திருக்கின்றேன் என்பதும் நம் உரையாடலில் இருந்து தெளிவாகின்றது. என்னிடம் பல அகராதிகள் உண்டு அவற்றில் "க்ரியா" அகராதியும் ஒன்று. தமிழ் அகராதிகளை 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயன்படுத்தி வருபவன், ஆகவே என் பார்வை சற்று வேறாக இருக்கக்கூடும். தகவலுழவன், உங்கள் ஆர்வத்தையும், நல்ல பங்களிப்புகளையும் நான் மதித்துப் போற்றுகின்றேன், ஆனால் நான் மாறுபட்டு கூறுவனவற்றை, அருள்கூர்ந்து வளர்முகமாக அணுக வேண்டுகிறேன். --செல்வா 15:35, 30 மார்ச் 2008 (UTC)

தகவலுழவன், நீங்கள் விளம்பர நோக்குடன் செய்ய வில்லை. ஆனால், இந்தப் படம் ஒரு விளம்பரமாகப் புரிந்து கொள்ளப்பட வாய்ப்புகள் கூட என்பதையே எடுத்துரைத்தோம். இந்தப் படம் என்றில்லை, விக்கி திட்டங்களில் எந்த ஒரு பொதுவான பொருளுக்கும் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் தயாரிப்புகளை எடுத்துக்காட்டாகத் தருவதைத் தவிர்க்கிறோம். --ரவி 00:36, 31 மார்ச் 2008 (UTC)

நண்பர் ரவிக்கு,[தொகு]

தங்களின் தெளிவுரைக்கு, மிக்க நன்றி.தகவலுழவன் 05:28, 31 மார்ச் 2008 (UTC)

பேந்து[தொகு]

பேந்து 37.169.0.238 19:44, 28 மார்ச் 2022 (UTC)

Give 103.21.165.122 13:35, 16 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:அகராதி&oldid=1995640" இலிருந்து மீள்விக்கப்பட்டது