தவிடு
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
தவிடு (பெ)
- நெல் முதலிய தானியங்களை குத்தி அல்லது அரைத்து, அரிசி முதலியன எடுத்தபின் மிஞ்சும் [[உமி] அல்லாத கழிவு
- பொடி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- கால்நடைகளுக்கு தண்ணீரில் கலந்து உணவாகக் கொடுக்கப்படுவது
பயன்பாடு
- ஆடுமாடுகள், புல். தவிடு வைக்கோலைத் தின்று ஜீரணித்து வாழ்கின்றன. (மர எண்ணெயில் கார்கள் ஓடப்போகின்றன, முனைவர் க. மணி)
- "அப்பப்போ நீங்க கொடுக்கிறதை வாங்கித் தான் தவிடு, பிண்ணாக்கு என்று வாங்கணும்". (குறிஞ்சி மலர், தீபம் நா. பார்த்தசாரதி)
- அந்தத் தடையை ஒரு நொடியில் நான் தவிடு பொடி செய்து விடுகிறேன் (பொன்னியின் செல்வன், கல்கி)
- தவிடு இல்லாத தண்ணீர், புல்லுக்கு பதிலாக வைக்கோல், கோபம் வந்தால் அடி என எல்லா பாடுகளையும் அனுபவித்தது அந்த மாடு. (தாய்மை, மொசைக்குமார்)
- மாட்டுக்கு ஏற்ற உணவுதான் தவிடு. ஆனால், தவிட்டு எண்ணெய்க்காக அரிசி ஆலைகளிலிருந்து நேரடியாக எண்ணெய் பிழிவுக் கூடங்களுக்குக் கொண்டுசெல்லப்படுகின்றன தவிடு மூட்டைகள். (பாவம், கறவை மாடுகள், தினமணி, 26 ஆகஸ்டு 2010)
- தங்கம் தரையிலே தவிடு பானையிலே (பழமொழி)
- அக்கா வைச்சிருந்தா அரிசி; தங்கை வச்சிருந்தா தவிடு (பழமொழி)
- தட்டுமுட்டுச் சாமானெல்லாம் தங்கமே தங்கம் - இங்கே
- தவிடு பொடியாச்சுதடி தங்கமே தங்கம்
- தவிடு பொடியாச்சுதடி தங்கமே தங்கம் - நம்ம
- தாலிமணி பறிபோச்சு தங்கமே தங்கம்..! (மலையக நாட்டார் பாடல்கள், மலையகம் கூகுள் குழுமம்)
(இலக்கியப் பயன்பாடு)
- நெல்லினுக்குத் தவிடுமிக ளனாதியாயும் (சி. சி. 11, 6)
- தவிடுபடு தொகுதியென (உத்தரகா. கந்திருவர். 50)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---தவிடு--- DDSA பதிப்பு + வின்சுலோ +