புல்லுருவி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

புல்லுருவி, பெயர்ச்சொல்.

  1. ஒரு களை வகை தாவரம்; மரஞ்செடிகளில் ஒட்டிவளரும் பூடுவகை
மொழிபெயர்ப்புகள்
  1. Honeysuckle mistletoe, Loranthus longiflorus ஆங்கிலம்
  2. parasite
விளக்கம்
  • மரங்கள் மீது படர்ந்து வளர்ந்து அவற்றின் சத்தினை உறிஞ்சும் ஒட்டுண்ணி வகை தாவரம். இச்சொல் பிறரது உழைப்பை உறிந்து அவரைச் சார்ந்து வளர்பவர் என்ற பொருளில் வசைச்சொல்லாகவும் பயன்படுகிறது
பயன்பாடு
  • ”நல்ல மரத்தில் புல்லுருவி பாய்ந்ததுபோல், இந்தத் தமிழ்நாட்டில் சமணம் ஏன் வந்தது சுவாமி!" என்று குலச்சிறை ஆவேசத்துடன் பேசிவந்தபோது நாவுக்கரசர் முகத்தில் புன்னகை தவழ்ந்தது.(சிவகாமியின் சபதம், கல்கி)
  • "ஆச்சப்பா இன்னமொன்று சொல்லக் கேளு, அப்பனே வயமான செங்கரும்பு, காச்சிய வெந்நீருடனே கருடப் பிச்சு, கல்லுருவி புல்லுருவி நல்லூமத்தை (கருடப்பச்சை என்றும் பாடம்)..." என்று எழுதிவிட்டு, வாசல் வழியாகப் போகும் தபாற்காரன் உள்ளே நுழையாமல் நேராகப் போவதைப் பார்த்துவிட்டு, "இன்றைக்கு பத்திரிகை போகாது" என்று முனகியபடி, எழுதியதைச் சுருட்டி மூலையில் வைத்துவிட்டு விரல்களைச் சொடுக்கு முறித்துக் கொண்டார். (கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும், புதுமைப்பித்தன்)



( மொழிகள் )

சான்றுகள் ---புல்லுருவி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=புல்லுருவி&oldid=1904941" இலிருந்து மீள்விக்கப்பட்டது