உம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

உம் (இ)

  • உம் என்னும் இடைச்சொல் 8 பொருளில் வரும்
எச்சம் சிறப்பே ஐயம் எதிர்மறை முற்றே எண்ணே தெரிநிலை ஆக்கம் - என்று அப்பால் எட்டே உம்மைச் சொல்லே (தொல்காப்பியம் இடையியல் 7)
  1. எச்சம்
  2. சிறப்பு
  3. ஐயம்
  4. எதிர்மறை
  5. முற்று
  6. எண்
  7. தெரிநிலை
  8. ஆக்கம்


பயன்பாடு
  1. இளங்கோவடிகளும் வந்தார்.- என்றால் இளங்கோவடிகள் அன்றி வந்த பிறரையும் உணர்த்தும். (எச்சம்)
  2. தேவரே தின்னினும் வேம்பு கசக்கும். (நாலடியார் 112)(சிறப்பு)
  3. பத்தானும் எட்டானும் தருக.(ஐயம்)
  4. கொற்றன் வருதற்கும் உரியன்.- என்றால் வராமைக்கும் உரியன் என்னும் பொருள் தரும்.(எதிர்மறை)
  5. மூவரும் வந்தனர்.- முற்றும்மை ஏற்கும் சொற்கள் பெரும்பாலும் தொகைச்சொல்லாக அமையும்.(முற்று)
  6. நிலனும் நீரும் தீயும் காற்றும் காயமும் கலந்த மயக்கம் உலகம்.(எண்)
  7. நன்றும் அன்று; தீதும் அன்று.- என்றால் இடைநிலைப்பட்டது எனத் தெளிவுபடுத்தியது ஆயிற்று.(தெரிநிலை)
  8. நெடியனும் வலியனும் ஆயினான். என்பது ஆக்கம்.(ஆக்கம்)


( மொழிகள் )

சான்றுகள் ---உம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=உம்&oldid=1911882" இலிருந்து மீள்விக்கப்பட்டது