ஏகபோகம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

ஏகபோகம், பெயர்ச்சொல்.

  1. தனக்கே உரியதுபோல் அனுபவித்தல்; தனியுரிமை; முழு ஆதிக்கம்
  2. அமோகம்
  3. ஒரு போகம்
  4. இருவருக்கும் ஒத்த போகம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. sole enjoyment or possession; monopoly, exclusivity
  2. abundance
  3. single crop
  4. mutual, reciprocal enjoyment
விளக்கம்
  • ஏகபோகம் = ஏக + போகம்
பயன்பாடு
  • ஏகபோகம் என்பது சட்ட விரோதச் சூழ்ச்சிகள் மூலம் போட்டியாளர்களை ஒழித்து விடுவதால் அடையப்படுவது அல்ல. சுயமுயற்சியின் மூலம் ஒரு பொருளை அல்லது சேவையை உருவாக்கி, அதைச் சந்தைப்படுத்தி, அதற்கான சந்தையை விரிவுபடுத்தித் தனித்தன்மையான அடையாளத்தையும், நிலையான இடத்தையும் உருவாக்கிக் கொள்வதே ஏகபோகம். அந்தச் சேவை அல்லது பொருள் கொஞ்ச காலத்துக்காவது தம் வசமே, தாம் மட்டுமே வழங்குவதாக இருக்கும்படி செய்வதே ஏகபோகம். (போட்டி போடாமல் வெல்வது எப்படி? தினமணி, 21 May 2012)
(இலக்கியப் பயன்பாடு)
  • ஏகபோகமாய் நீயுநானுமாய் இறுகும்வகை பரமசுகமதனையருள் . . . பெருமாளே (திருப்பு. 862)
(இலக்கணப் பயன்பாடு)
  • ...
தனியுரிமை - ஆதிக்கம் - போகம் - அனுபவம் - ஏகாதிபத்தியம் - சர்வாதிகாரம் - #


( மொழிகள் )

சான்றுகள் ---ஏகபோகம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஏகபோகம்&oldid=1986627" இலிருந்து மீள்விக்கப்பட்டது