தூமை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

தூமை , (பெ)

  1. தூய்மை, சுத்தம்
  2. வெண்மை
  3. மகளிர் சூதகம்; மாதவிடாய். பாவர் தூமையர்கள் கோளர்(திருப்பு. 363)
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. purity, cleanliness, cleanness
  2. whiteness
  3. catamenia, menstruation
விளக்கம்
பயன்பாடு
  • தூமை வெளியேற்றத்தில் வெளியேறுவது கருத்தரிப்பிற்காக உடல் தயாரிக்கும் குருதி.
  • பெண்மையின் குறியீடாக இருக்கும் இத் தூமையை அடையும் இளம் பெண்கள் ‘கொண்டாடப்படுவது’ சமூகத்திலுள்ள மற்ற ஆண்களுக்கும் இதைப்பற்றி அறிவிப்பதற்காகவும் அவளது நடவடிக்கைகளில் அந்நாள் முதல் மாற்றம் ஏற்படுத்துவதற்காகவும் தான்.
  • கருவுறாத பெண்ணை மலடி என்பது, கருவுறுவதற்கு காரணாக இருக்கும் தூமை வெளிப்பாட்டை தீட்டு என்பது, இல்லறத்தில் நாட்டமில்லாத பெண்களின் நடத்தையை இழித்துப் பேசுவது அவர்களின் உடற்பாகங்களை வசைசொல்லாகப் பயன்படுத்துவது போன்ற செயல்கள் காலம் காலமாக ஆணாதிக்க கருத்தாக்கங்களால் கட்டமைக்கப்பட்ட சமூகத்தில் நடந்து வருகின்றன. (தூமை எனும் பெயரைப் பற்றி…., )
  • தூமைச்சீலை - menstruous cloths; in abuse, a man could be called.

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---தூமை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

தூய்மை - வெண்மை - சூதகம் - பெண்மை - மாதவிடாய் - தீட்டு - தூமை
"https://ta.wiktionary.org/w/index.php?title=தூமை&oldid=1383163" இலிருந்து மீள்விக்கப்பட்டது