கோட்டான்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
கோட்டான் -rock-horned owl
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • (பெ) கோட்டான்
மொழிபெயர்ப்புகள்
  • rock horned owl; bubo bengalensis
  • a species of bittern
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  • இரவு நேரம்... எதிரிகளின் பாசறைக்குச் சமீபமான வனத்தின் ஓர் ஆலமரத்தடியில் வந்து அமர்ந்தான் அஸ்வத்தாமன். பாண்டவர்களை எப்படி அழிப்பது என்று தீவிரமாகச் சிந்தித்தான். அந்த மரத்தின்மேல் இருந்த கூட்டில் காக்கைகள் உறங்கிக் கொண்டிருந்தன. அப்போது, ஒரு கோட்டான் அங்கே வந்து, உறங்கிக்கொண்டிருந்த காக்கைகளைக் கொத்தித் தின்றது. இரவில் கண் தெரியாமல், எதிரி யாரென்றும் அறியாமல், எதிர்க்கவும் முடியாமல், காக்கைகள் உயிர் விட்டன. அந்தக் கோட்டான், காக்கைகளைக் கொன்றதுபோல உறங்கிக் கொண்டிருக்கும் பாண்டவர்களையும், பாண்டவ புத்திரர்களையும் கொன்று, பாண்டவ வம்சத்தையே இரவோடு இரவாகப் பூண்டோடு அழிக்கத் திட்டமிட்டான் அஸ்வத்தாமன். (கருவைச் சிதைத்த காத்யாயினி ஜூனியர் விகடன், 06-மார்ச் -2012)
  • அன்றைக்கு பார்த்து எந்த கோட்டான் முகத்திலே முழிச்சாரோ? (which owl's face did he see when he woke up that day? => to be unlucky that day)
  • பார்ப்பதற்குக் கோட்டான் மாதிரி இருக்கிறீர்கள் (you look like a rock horned owl)

(இலக்கியப் பயன்பாடு)

  • இருண்ட மரக்கிளைகளில் ஆந்தைகளும் கோட்டான்களும் வாசம் செய்தன (பொன்னியின் செல்வன், கல்கி)
  • அதோ ஓர் ஆந்தை உறுமுகிறது! இந்தப் பக்கம் ஒரு கோட்டான் கூவுகிறது! (பொன்னியின் செல்வன், கல்கி)
  • கூகையைக் கோட்டா னென்றலும் (தொல். பொ. 623)

ஆதாரம்} --->

"https://ta.wiktionary.org/w/index.php?title=கோட்டான்&oldid=1968013" இலிருந்து மீள்விக்கப்பட்டது