jungle

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

jungle:
காடு---தமிழக நீலகிரி
jungle:
காடு
  • சொற்பிறப்பு:

  • (இந்தி/உருது--जंगल--ஜங்க1ல்---மூலச்சொல்)

பொருள்[தொகு]

  • jungle, பெயர்ச்சொல்.
  1. காடு
  2. அடவி
  3. வனம்
  4. ஆரணியம்
  5. அபாயகரமான இடம்/ நிலைமை
  6. கொடிய நிலைமை/இடம்
  7. பெருங்குழப்ப நிலை

விளக்கம்[தொகு]

  1. மரம், செடி, கொடி, புல், பூண்டு ஆகியத் தாவர இனங்கள் மிகச் செழிப்பாக அடர்ந்துவளர்ந்து, மனிதர்கள் குடியேறி வாழாத, பலவகை விலங்குகள், பாம்புகள் போன்ற உயிரினங்கள், பறவைகள் இன்னும் அனைத்து உயிரினங்களும் சுதந்திரமாக சுற்றித்திரிந்து வாழும் நிலப்பகுதி...பூமியின் தட்பவெப்ப நிலைகளுக்கேற்ப காடுகள் வேறுபட்டு இயற்கையாக அமைந்திருக்கும்...மலைகளிலும், பிற நில அமைப்புகளிலும், ஆறுகள் போன்ற நீர்நிலைகளின் கரைகளிலும் காடுகள் செழித்து வளரும்...காடுகளின் தன்மை மற்றும் அமைந்துள்ளப் பிரதேசங்களுக்கு ஏற்றவாறு வெப்பமண்டலக்காடுகள், சதுப்புநிலக்காடுகள், மலைக்காடுகள் என இன்னும் பலவேறு வகையாகக் காடுகளை இனம் பிரிப்பர்...பூமியில் மழை ஒழுங்காக, நிறைவாகப் பெய்ய பெரிதும் உதவும் காடுகள் மனிதக் குலத்திற்கும் பலவகைகளிலும் பயனுள்ளதாக இருக்கிறது...
  2. அடிப்படையாக உயிர்வாழ்ந்துப் பிழைக்கவும், ஒரு கடும் போர்க்காலத்தில் வெற்றிபெறவும் பொதுமக்கள் போராடும் பிரதேசம் அல்லது சூழ்நிலை அல்லது பெருங்குழப்பமான சுற்றுச் சூழலையும் ஆங்கிலத்தில் JUNGLE என்றேக் குறிப்பிடுவர்...
  • jungle (சொற்பிறப்பியல்)
( மொழிகள் )

ஆதாரங்கள் ---jungle--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் * DDSA பதிப்பு..[1], [2], [3]

"https://ta.wiktionary.org/w/index.php?title=jungle&oldid=1973730" இலிருந்து மீள்விக்கப்பட்டது