பேச்சு:exchange

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

சோறு பரிமாறு என்று சொல்வதும் இந்த பரிமாற்றமும் ஒன்றா? அப்படியானால் இரு வழிப் பரிமாற்றம் சோறு பரிமாறுவதில் காணப்படுவதில் இல்லையே? exhange your old bike for a new bike என்பதை தமிழில் எப்படிச் சொல்வது? பழைய வண்டியைக் கொடுத்து புது வண்டிக்கு மாற்றிக் கொள்ளுங்கள்?? இதில் வெறும் மாற்று என்று வினை மட்டுமே வருகிறது? change = மாற்று. இந்த ex முன்னொட்டுக்கு ஈடான தமிழ் முன்னொட்டு இருக்கிறதா?--ரவி 15:14, 17 மார்ச் 2007 (UTC)

பரிமாறு என்பதில் உள்ள பரி என்பதற்குப் பல பொருட்கள் உண்டு, ஆனால் சோறு பரிமாறு என்னும் வழக்கில் சுழற்சி என்னும் கருத்து (பரிதி, பரிவட்டம் முதலிவை போல்). அதாவது பரிமாறுவோர், ஒவ்வொரு உணவுப் பொருளாக மீண்டும் மீண்டும் சுழன்று வந்து இலையில் இடுவதால் பரிமாறு என்று பொருள். பரி என்பதற்கு மிகு நுட்பம், குதிரை போன்று பல பொருட்கள் உண்டு. பண்டமாற்று முதலிய சொற்களில் இருவழி மாற்றம்தான். ஆங்கிலத்தில் ex என்பதற்கு இருவழி என்று பொருள் கிடையாது (வெளியே போவது என்பதுதான் பொருள், அது சில இடங்களில் எதிர்-எதிர் மாற்றங்களைக் குறிக்கும்). இதேபோல பண்டமாற்றுதல் என்றாலும் இருவழிதான். ஒன்றை மாற்றுதல் என்றாலே, ஒன்றை நீக்கிவிட்டு (களைந்து விட்டு), ஒன்றை பொருத்துவதுதானே. இதுவும் இருவழிதான். --C.R.Selvakumar 00:16, 20 மார்ச் 2007 (UTC)
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:exchange&oldid=37978" இலிருந்து மீள்விக்கப்பட்டது