ஓட்டைகை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஓட்டைகை--இந்த ஓட்டைகை மைந்தனின் கதைக்கு இங்கே சொடுக்கவும்[1]

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

ஓட்டைகை, பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. ஊதாரித்தனமாகச் செலவு செய்யும் கை/நபர்
  2. வீணாகச் செலவு செய்யும் கை/நபர்

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. prodigal
  2. spendthrift

விளக்கம்[தொகு]

  • பேச்சு வழக்கு...வகைதொகை பார்க்காமல் ஊதாரித்தனமாக செலவு செய்வதும், யோசிக்காமல் வாரி வழங்குவதும் இரு கைகளினாலேயேயாகும்...அப்படிச் செய்யும் நபருக்கு ஓட்டை விழுந்த கைகள் அதாவது எப்பொருளும் கையில் தங்காமல் இருக்கும் நிலை இருப்பதாகப் பாவித்து அவர்களை ஒட்டைகை என்றழைப்பது பேச்சு வழக்கு.

பயன்பாடு[தொகு]

  • தேவையில்லாமல் வீட்டில் ஊரிலுள்ள எல்லா உறவினர்களையும் அழைத்துவைத்துக்கொண்டு நாட்கணக்கில் எப்படி உபச்சாரம் பண்ணுகிறான் பார், அந்த நாராயணசாமி...சரியான ஓட்டைகை... போகபோகதான் அவனுக்குத் தெரியப்போகிறது, வெல்லம் இருக்குமிடம்தான் ஈ மொய்க்கும் என்று...
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஓட்டைகை&oldid=1222549" இலிருந்து மீள்விக்கப்பட்டது