கர்லாக்கட்டை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
கர்லாக்கட்டை
கர்லாக்கட்டை

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

கர்லாக்கட்டை, பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. உடற்பயிற்சி செய்ய உதவும் ஒரு உபகரணம்.

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. dumbbell
  2. indian club used for physical exercise

விளக்கம்[தொகு]

புறமொழிச்சொல்...உருது மொழி மூலச்சொல்...கரெலா (உருது) + கட்டை (தமிழ்) = கர்லாக்கட்டை...உடற்பயிற்சி செய்ய ஒரு சிறந்த சாதனமாகும் இந்த 'கர்லாக்கட்டை'கள்...வகைவகையான கனம் கொண்டவைகளாக, பல்வேறு வடிவமைப்புகளில், கனத்த மரம்/இரும்பினால் ஆனவை...மார்பு, தோள், கைகளுக்கு வலு சேர்க்கக்கூடியவை...இருகைகளிலும் கைக்கு ஒன்றாகவோ அல்லது ஒரே ஒரு கையாலோ கர்லாக்கட்டையை தோளுக்கு மேல் தூக்கியும் பிறகு இறக்கியும் தொடர்ந்து உடற்பயிற்சி செய்வர்...


( மொழிகள் )

சான்றுகள் ---கர்லாக்கட்டை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=கர்லாக்கட்டை&oldid=1218114" இலிருந்து மீள்விக்கப்பட்டது