கடைவழி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
மகாத்மா காந்தியும் கடைவழிக்குப் போகாமல் தப்பினார் அல்லர்.

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

கடைவழி, பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. மனிதனின் கடைசிப் பயண வழி

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. The path beyond the death on which the soul travels...

விளக்கம்[தொகு]

  • மனிதன் உலகில் உயிர்வாழும்போது பற்பல வழிகளில் அதாவது பாதைகளில்/சாலைகளில் பயணித்திருப்பான்...அனால் அவன் கடைசியாகப் பயணிப்பது இந்தக் கடைவழியில்தான்...மரணத்திற்குப் பின்னும் இறந்த மனிதனின் ஆன்மாவிற்கு வாழ்க்கை இருக்கிறது என்னும் இந்துமதக் கோட்பாடிற்கிணங்க, ஒரு மனிதன் இறந்தபின்னும் அவனுடைய ஆன்மா மேலுலகத்திற்குச் செல்லும் கடைசிப் பாதையே கடைவழி ஆகும்...

இலக்கியம்[தொகு]

"வாதுற்ற அண்ணாமலையர் மலர்ப்பதத்தைப்
போதுற்றபோது புகலுநெஞ்சே இப்பூதலத்தில்
தீதுற்ற செல்வமென் தேடிப்புதைத்த திரவியமென்
காதற்ற ஊசியும் வாராதுகாண் கடைவழிக்கே!..."

  • பட்டிணத்தார்.


( மொழிகள் )

சான்றுகள் ---கடைவழி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=கடைவழி&oldid=1220731" இலிருந்து மீள்விக்கப்பட்டது