crab meat

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
crab meat
crab meat

ஆங்கிலம்[தொகு]

  • crab meat, பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. நண்டிறைச்சி
  2. நண்டின் மாமிசம்

விளக்கம்[தொகு]

  1. கடல், நீர்நிலைகளில் வாழும் விதவிதமான நண்டுகள் மிக நீண்ட காலமாகவே மனிதனுக்கு உணவாகப் பயன்பட்டு வருகிறது...நண்டு உலகின் எல்லா கடல்களிலும் காணப்படும் ஒரு நீர்வாழ் உயிரினமாகும்...குளம், ஏரி, ஆறு போன்ற நன்னீர் நிலைகளில் காணப்படும் நண்டு இனங்களும் உண்டு... சில மில்லிமீட்டர் அகலமான நண்டுகள் முதல், கால்களின் அகலம் நான்கு மீட்டர் வரை வளரும் ஜப்பானியச் சிலந்தி நண்டு வரை பல அளவுகளிலும், நிறங்களிலும் காணப்படுகின்றன... நண்டுகள் பொதுவாகத் தட்டையான ஓடும் ஐந்து சோடி கால்களும் கொண்டவை... இவற்றில் முதற்சோடிக் கால்கள் இரைப் பிடிக்கும் கவ்விகளாக மாற்றமடைந்துள்ளன... நண்டுகள் மேல் ஓட்டினை உடையன... ஆண்டுக்கொருமுறை மேலோடுகளை கழற்றிப் புதுப்பித்துக் கொள்கின்றன... நண்டுகள் கூட்டுக்கண்கள் இரண்டைக் கொண்டவை...பெண் நண்டுகள் ஆண் நண்டுகளைவிட அகலமான வயிற்றுப்பகுதியைக் கொண்டுள்ளன... வயிற்றின் கீழேயே அவை தம் முட்டைகளைப் பாதுகாப்பாக வைத்திருக்கும்...
( மொழிகள் )

ஆதாரங்கள் ---crab meat--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் #

"https://ta.wiktionary.org/w/index.php?title=crab_meat&oldid=1844379" இலிருந்து மீள்விக்கப்பட்டது