இண்டு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

இண்டு--Mimosa rubicaulis

(Mimosa Spinosiliqua-Small variety...(தாவரவியல் பெயர்)),,\(Mimosa rubicaulis...(தாவரவியல் பெயர்))

பொருள்[தொகு]

  • இண்டு, பெயர்ச்சொல்.
  1. கொடி வகை
    (எ. கா.) இண்டு படர்ந்த மயானம் (பதினோ.மூத்.10)
  2. தொட்டாற் சுருங்கி (L.)
  3. செடிவகை (L.) (மலை.)
  4. காண்க: புலிதொடக்கி

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Eight-pinnate soap-pod, l.
    (எ. கா.) cl., Acacia intsiacaesia
  2. Sensitive plant, mimosa
  3. Species of sensitive-tree, l. sh., Mimosa rubicaulis
  4. Tiger-stopper

மருத்துவ குணங்கள்[தொகு]

இண்டின் கொடியினால் பீநசம், சலதோஷம், கபாலக்குடைச்சல், முகசந்நிபாதம் ஆகியப் பிணிகள் போகும்...

உபயோகிக்கும் முறை[தொகு]

இண்டந்தண்டைத் துண்டு துண்டுகளாக நறுக்கிப் பிழிந்து, வாயினால் ஊதியெடுத்த அரை அவுன்சு சலத்தில் அரை பண எடை திப்பிலிச்சூரணமும், அரை பண எடை பொரித்த வெங்காரமும் போட்டுக்கலக்கி தினம் ஒரு வேளை மூன்று நாட்கள் கொடுத்தால் ஈளை, இருமல் குணமாகும்...இந்தக் கலவையில் குழந்தைகளுக்கு ஒன்று அல்லது ஒன்றரைத் தேக்கரண்டி அளவுக் கொடுக்க கப சம்பந்தமான உரோகம், மாந்தம் குணமாகும்...இந்த மூலிகையுடன் மற்ற மருந்துப்பொருட்களைக்கூட்டி மாந்த எண்ணெய்களாகக் காய்ச்சி உபயோகப்படுத்துவர்...அவற்றில் விசேடமானவை அஷ்டகணமாந்த எண்ணெய் மற்றும் மாந்த எண்ணெய் ஆகும்...



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=இண்டு&oldid=1212834" இலிருந்து மீள்விக்கப்பட்டது