முட்டு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • முட்டு, பெயர்ச்சொல்.
  1. விலங்கு முதலியன கொம்பு முதலியவற்றால் தாக்குகை
  2. தடை
    (எ. கா.) முட்டுவயிற் கழறல் (தொல். பொ. 271) பன் முட்டின்றாற் றோழி நங்கள வே (அகநா. 122)
  3. குறைவு
    (எ. கா.) மூவேழ் துறையு முட்டின்று போகிய (புறநா. 166)
  4. உட்சென்று கடத்தலருமை
    (எ. கா.) முட்டுடை முடுக்கரும் (சீவக. 1216)
  5. கண்டுமுட்டுக் கேட்டுமுட்டு முதலிய தீட்டுக்கள் (பெரியபு. திருஞான. 692.)
  6. மாதவிடாய் (W.)
  7. கருவி
    (எ. கா.) கொற்றரு மிருப்பு முட்டு (திருவாலவா. 45, 8)
  8. சில்லறைப் பொருள்கள்
    (எ. கா.) கட்டினேம் முட்டுக்களை (புறநா. 206, உரை)
  9. பற்றுக்கோடு
  10. முழங்கால் முழங்கை விரல்கள் இவற்றின் பொருத்து
  11. மேடு (W.)
  12. குவியல்
    (எ. கா.) பண்டங்கள் முட்டு முட்டாய்க் கிடக்கின்றன
  • முட்டு, வினைச்சொல்.
  1. தப்பி ஓடு, நழுவு - இது கோவை, திருப்பூர் போன்ற கொங்கு மாவட்டங்க்ளில் பயன்பாட்டில் உள்ளது (எ.கா. ஆட்டுக் குட்டி அடைத்து வைத்திருந்த குடாப்பிலிருந்து முட்டியது. Baby goat escaped from its coop)
  2. உரசு, தொடு - butt
    (எ. கா.) என் மீது முட்டாமல் கொஞ்சம் தள்ளி நில்
    (எ. கா.) முட்டி மோது
    (எ. கா.) இரண்டு வெள்ளாடுகள் தமது தலையால் முட்டிக் கொண்டு சண்டை போட்டுக் கொண்டன.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Battering, butting Hindrance, obstacle, impediment காண்க: முட்டுப்பாடு, *** Shortness, deficiency Difficulty, as in passing Pollution Menses Tool, instrument Sundry things Prop, support Knee; elbow; knuckle Rising ground, high ground Heap



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=முட்டு&oldid=1968127" இலிருந்து மீள்விக்கப்பட்டது