வளைதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • வளைதல், பெயர்ச்சொல்.
  1. கோணுதல்
  2. தாழ்தல்
    (எ. கா.) முற்றமூத்துக் கோல்துணையா முன்னடி நோக்கி வளைந்து (திவ். பெரியதி. 1, 3, 1)
  3. தோற்றல்
    (எ. கா.) வளையா வயவரும் (பு. வெ. 7, 18)
  4. திடமறுதல் (சீவக. 1068, உரை.)
  5. நேர்மையினின்று விலகுதல்
    (எ. கா.) வளையாத செங்கோல் வளைந்ததிது வென்கொல் (சிலப். 19, 16)
  6. வருந்துதல்
    (எ. கா.) வளையார்பசியின் (பதினொ. திருவிடை. மும்மணிக். 21)
  7. சுற்றுதல்
    (எ. கா.) குழந்தை வயிற்றில் வளையவருகிறான் -tr
  8. சூழ்தல்
    (எ. கா.) வளைகடல் வலையிற் சூழ்ந்து (சீவக. 1115)
  9. சுற்றி வருதல்
    (எ. கா.) வையக முழுதுடன் வளைஇ (புறநா. 69)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. To bend; to become crooked
  2. To bend low
  3. To be defeated
  4. To yield, give way
  5. To deviated, as from rectitude
  6. To suffer
  7. To move about, as foetus in the womb
  8. To surround, encompass, besiege
  9. To hover round; to walk around


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வளைதல்&oldid=1347836" இலிருந்து மீள்விக்கப்பட்டது