இழைத்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

இழைத்தல்:
என்றால் நூல் நூற்றல்
இழைத்தல்:
என்றால் செதுக்குதல்---செதுக்கப்பட்ட சிற்பங்கள்

[[|thumb|200pxpx||இழைத்தல்:
என்றால் வரைதல்---வரையப்பட்ட ஓவியம்]]

இழைத்தல்:
பதித்துச் செய்தல்---வைரக்கற்கள் பதித்துச் செய்யப்பட்ட மோதிரம்
இழைத்தல்:
என்றால் பின்னுதல்---பாய் பின்னப்படுகிறது



பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • இழைத்தல், வினைச்சொல்.

(செயப்படுபொருள் குன்றா வினை () பெயரடை)

  1. நூற்றல்
    (எ. கா.) சின்னூல் பலபல வாயாலிழைத்துச் சிலம்பி பின்னும் (அஷ்டப். திரு வரங். மாலை, 18).
  2. செய்தல்
    (எ. கா.) இழைத்தவிச்சிற்றிலை (திவ். நாய்ச். 2, 2).
  3. சூழ்தல் (சீவக. 1089.)
  4. செதுக்குதல் (ஈடு. 1, 4, 7.)
  5. நுண் பொடியாக்குதல் (பரிபா. 10. 91.)
  6. மாமுதலியன மெதுவாக்குதல்
    (எ. கா.) இழையஞ் சன மால்களிறு (கம்பரா. அதிகாய. 21).
  7. பதித்துச் செய்தல்
    (எ. கா.) மணியினிழைத்த செய்குன்றின் (நைடத. நகர. 6).
  8. கூறுதல்
    (எ. கா.) கிழவனை நெருங்கி யிழைத்து (தொல். பொ. 150).
  9. விதித்தல்
    (எ. கா.) இழைத்தநாளெல்லை கடப்ப தன்றால் (தேவா. 727, 5).
  10. வரைதல்
    (எ. கா.) குங்கும வருணங் கொங்கையினிழைத்து (சிலப். 14, 90).
  11. அமைத்தல்
    (எ. கா.) பொற்பாவிழைத்துக் கொளற்பாலர் (சீவக. 4).
  12. திரட்டிவைத்தல்
    (எ. கா.) பொங்கரினிழைத்த (மாறனலங். பக். 244).
  13. சங்கற்பித்தல் (குறள். 779.)
  14. மாத்திரைமுதலியன உரைத்தல் (பேச்சு வழக்கு)
  15. இழையாக்குதல் (பேச்சு வழக்கு)
    (எ. கா.) கதிரிலுள்ள நூலை யிழைத்தான்
  16. நிமிண்டுதல் (உள்ளூர் பயன்பாடு)
    (எ. கா.) கன்னத்தைப்பிடித்து இழைத்தான்
  17. பஞ்சுமுதலியன ஆய்ந்தெடுத்தல் (W.)
  18. பின்னுதல் (J.)
    (எ. கா.) பாயிழைத் தான்
  19. நுண்ணிதாக ஆராய்தல்
    (எ. கா.) இழைத்துணர்ந்து (குறள். 417).

(செயப்படுபொருள்குன்றிய; தன்வினை)

  1. மூச்சு இழுத்தல், மூச்சிரைத்தல்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்

verb. tr.

  1. to spin
  2. to make, do, construct
  3. to turn over in one's mind, deliberate, calmly, consider
  4. to plane, scrape off
  5. to grind into fine powder
  6. to make soft, as fine powder
  7. to set, as precious stones
  8. to utter, say
  9. to appoint, determine, destine, fix
  10. to paint, draw, daub
  11. to take, accept
  12. to store up
  13. to determine, to take a vow
  14. to rub so as to be dissolved, as a pill in honey or milk
  15. to divide into strands, as a thread
  16. to squeeze the flesh so as to give pain
  17. to select, pick out, separate, to cull, as cotton
  18. to braid, as mats, to plait, weave
  19. to scrutinize

verb.intr.

  1. to breathe hard



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=இழைத்தல்&oldid=1458629" இலிருந்து மீள்விக்கப்பட்டது