அப்பா

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

என்ற தமிழ் விக்கிப்பீடியாவின் விரிவான கட்டுரையையும் காண்க.

பொருள்[தொகு]

  • அப்பா, பெயர்ச்சொல்.
  1. தந்தை
  2. தாத்தாவை அப்பா என்று தமிழகத்திலும் இலங்கையிலுமுள்ள சில ஊர்களிலுள்ள முசுலிம்கள் அழைக்கிறார்கள். தந்தையை அப்பா என்று பகர ஓசையை அம்பாரி என்பதில் வரும் பகரம் போன்று அழுத்தி உச்சரிக்கின்றனர்.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

இலக்கிய மேற்கோள்கள்[தொகு]

  • கந்தபுராணம்: அப்பா உவர் அற்று அழிவு இல் பொருளின்
  • கம்பராமாயணம்:இரக்கம் எங்கு உகுத்தாய்? என்பால் எப் பிழை கண்டாய்? அப்பா!
  • திருக்குற்றாலம் பாடல்கள்: அப்பா லொருதாதன் குற்றாலப் பேரிச்
  • திருப்புகழ்: அப்பா கைப்பா லைப்போல் சொற்கா (திருப்பு. )
  • திருமந்திரம்: தன்னை அப்பா எனில் அப்பனும் ஆய் உளன்
  • திருவாசகம்: என்னை அப்பா அஞ்சல் என்பவர் இன்றி நின்று எய்த்து அலைந்தேன்
  • தேவாரம்:அப்பா உன் அடி அலால் அரற்றாது என் நா
  • பெரியபுராணம்: அம்மே அப்பா என்று என்று அழைத்து அருளி அழுது அருள
  • பாரதியார் பாடல்கள் : காட்டிலுள்ள பறவைகள் போல் வாழ்வோம், அப்பா!
  • பதினோராம் திருமுறை: மருதஅப்பா என்றும் உனை வாழ்த்தாரேல் மற்றும்


சொல்வளம்[தொகு]

அப்பா - அப்பன்
அப்பாடி, அப்பாயி, அப்பத்தா, அப்பப்பா, அப்பாடா
சிற்றப்பா - பெரியப்பா , அத்தன்


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அப்பா&oldid=1993459" இலிருந்து மீள்விக்கப்பட்டது