பயனர் பேச்சு:தகவலுழவன்/2016

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


Please check your emails, I've sent you a mail. Thanks! Jim Carter (பேச்சு) 17:29, 28 சனவரி 2016 (UTC) I replied.--தகவலுழவன் (பேச்சு) 03:23, 29 சனவரி 2016 (UTC)[பதிலளி]

சில உதவிகளும் அறிவுறுத்தலும் தேவை[தொகு]

  • இன்றுதான் உங்கள் பயனர் பக்கத்திற்கு வந்தேன்..தற்சமயம் உங்கள் தந்தையார் எப்படியுள்ளார்?...முழு நலத்துடன் இருப்பாரெனத் திடமாக நம்புகிறேன்..சமீப காலமாக நான் பங்களிக்கும் தலைப்புகளின் உரையாடற் பகுதியில் கேட்கப்படும் ஐயங்களுக்கும், கேள்விகளுக்கும் விடை கிடைப்பதில்லை!!...மிக சமீபத்திய शिरस् பக்கத்தில் ஏற்பட்டப் பிரச்சினையைத் தீர்த்து வையுங்கள்...சமசுகிருதம், சமஸ்கிருதம் என இரு பகுப்புகள் தேவையில்லை...நான்தான் சற்றுக் குழம்பிவிட்டேன்...வேறு ஏதேனும் என் பங்களிப்புகளில் குற்றமோ, குறையோ இருந்தால் தெரிவியுங்கள்...தரக்குறைவாகவோ, அரைகுறையாகவோ அவைகள் உள்ளனவா?...சொல்லுங்கள் திருத்திக்கொள்ளலாம்!--Jambolik (பேச்சு) 16:22, 29 சனவரி 2016 (UTC)[பதிலளி]
தாமதமான பதிலுக்கு வருந்துகிறேன். பெற்றோர் நலமே, 80வயதை அவர்கள் நெருங்குவதால், சில உடற்செயலியல் இடர்கள் அவ்வப்போது வந்து செல்கின்றன. அவர்களை நன்கு கவனிக்க பணம் தேவைப்படுவதால், புதிய சூழலில் என்னை உட்படுத்திக் கொண்டுள்ளேன். அதனால் தான் இங்கு வர இயலவில்லை. விக்கிமூலத்தில் தற்போது எனது முனைப்பான பணிகளையும், அதற்குரிய நிரலாக்கத் தேவைகளையும் தேடிப்பிடித்து கட்டமைத்து வருகிறேன். இன்னும் ஓரிரு மாதங்களில் முனைப்புடன் இங்கும் செயற்படுவேன். உங்கள் பதிவுகள் எப்பொழுதுமே சிறப்பாகவே இருப்பதாக நான் கருதுகிறேன். எனக்கு உங்களைப் போன்று பிற மொழிகள் தெரியாததால், அதுபற்றி கூற இயலவில்லை. எனினும், என்னுள் பட்டதை அவ்வப்போது தங்கள் முன் வைக்கிறேன். மீண்டும் சந்திப்போம். வணக்கம்.--தகவலுழவன் (பேச்சு) 04:11, 8 பெப்ரவரி 2016 (UTC)

அறிவுறுத்தல் அவசியப்படுகிறது[தொகு]

சமீபகாலமாக தமிழ் விக்சனரியில் ஆங்கிலச் சொற்களின் இறந்தகால வடிவும், பன்மை வடிவும் தனித்தனிச் சொற்களாகவே பதிவேற்றப்படுகின்றன!...இதற்குத் தேவையில்லையென்றுக் கருதுகிறேன்...இந்த முறையில் மாக்கடலென சொற்கள் தேவையில்லாமல் குவியும் சாத்தியமுள்ளது...உங்கள் எண்ணமென்ன?...என்னோடு உடன்பட்டால் அதிகாரப்பூர்வமாக, முறையான ஒரு வேண்டுகோளை எதிர்பார்க்கலாமா?--Jambolik (பேச்சு) 14:48, 15 சூன் 2016 (UTC)[பதிலளி]

ஆங்கில விக்சனரியில் பன்மைச் சொற்களுக்கு பகுப்புள்ளது என்றே எண்ணுகிறேன். அதனால் இங்கு முன்பு பதிவுகளைத் தொடங்கினேன். ஆங்கில தளத்தை மாதிரியாக கொள்வதில் தவறில்லை என்றே எனக்குப்படுகிறது. உங்களுக்கு மாற்று திட்டமிருப்பின் அனைத்து தமிழ் விக்கநண்பர்களிடமும், என்பக்கத்தில் குறிப்பிட்டது போல, தெரிவியுங்கள். அவர்கள் எண்ணங்களையும் அறிந்து திட்டமிடுவோம். விக்கிமூல பணிகளில் தற்போது ஈடுபாடு கொண்டுள்ளதால், இதனை நீங்களே முன்னெடுக்க்க் கோருகிறேன். வணக்கம்.--தகவலுழவன் (பேச்சு) 07:00, 17 சூன் 2016 (UTC)[பதிலளி]

கன்னடச் சொற்களுக்கானப் படங்கள்[தொகு]

தங்கள் தந்தையார் நலமாக யிருக்கிறாரா?..விக்சனரிப் பக்கமே தாங்கள் இப்போதெல்லாம் வருவதில்லை!!!!...ஒரு விடயம்!..கன்னடச் சொற்களுக்கு வழக்கமான வார்ப்புருயிட்டு, படத்தை இணைத்தால் கன்னடம்-படங்களுள்ளவை...என்கிற பகுப்பு தானாகவேத் தோன்றுவதில்லை...தனியாகத் தட்டச்சு செய்யவேண்டியுள்ளது...மற்ற மொழிச் சொற்களுக்கு இந்த நிலை இல்லை...en, hi, ta, te, ml, sa என்றக் குறிப்புகளை இதே வார்ப்புருவிலிட்டால் பகுப்பு தானாகவேச் சரியாகத்தோன்றுகிறது...இது ஏன்?--Jambolik (பேச்சு) 22:54, 12 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]

நலம் பற்றிய வினாவிற்கு நன்றி. என் பெற்றோர் நலமே. மூப்புன் இடர்களை அவ்வப்போது அனுபவித்து வருகின்றனர். ಪುಷ್ಪ என்பதைக் காணவும். மீண்டும் சந்திப்போம். வணக்கம்.தகவலுழவன் (பேச்சு) 00:04, 13 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]

புதிய பகுப்புகள்[தொகு]

  • தற்போது தாவரவியல் பெயர், விலங்கியல் பெயர் ஆகிய பகுப்புகள் உள்ளன...பறவைகள், புழு, பூச்சிகள், மீன்கள், பாம்புகள் போன்ற மற்ற உயிரினங்களுக்குப் பகுப்பிடும்போது விலங்கியல் பெயர் என்ற பகுப்பையே கொடுத்துவிடலாமா?...தேவையெனக் கருதினால், தனித்தனிப் பகுப்புகளை உருவாக்கிக்கொடுத்தால் சிறப்பாக யிருக்குமென்று நினைக்கிறேன்...வணக்கம்--Jambolik (பேச்சு) 16:13, 17 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]
    • ஒரு பகுப்பு வளரும் போது, தங்களின் மேற்கூறிய எண்ணப்படி துணைப்பகுப்புகள் வளருவது/உருவாக்குவதில் எனக்கும் விருப்பமே. வழமைப்போல அசத்துங்கள். ஒரு பகுப்பில் 100 சொற்களாவது இருக்க வேண்டுமென்று எண்ணுகிறேன். உங்களின் எண்ணமறிய ஆவல்.--தகவலுழவன் (பேச்சு) 00:18, 18 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]
    • தற்காலிகமாக எல்லா உயிரினங்களுக்கும் விலங்கியல் பெயர் என்னும் பகுப்பையே தொடரலாமா என்றுக் கேட்கிறேன்? நீங்கள் எண்ணுவதைப்போலவே ஒவ்வொரு இனத்திலும் சொற்கள் நூறை நெருங்கும்போது துணைப் பகுப்புகளை உருவாக்கிக்கொள்ளலாம்--Jambolik (பேச்சு) 00:57, 18 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]
      • முதலில் உயிரினங்கள், தாவரவியல், விலங்கியல் என ஏற்கனவே உள்ளனவே. விரிவுபடுத்தவே உரையாடுகிறோம். நீங்கள் சரியாகவே செய்கிறீர்கள். ஏன் இந்த ஐயவினா? தொடருங்கள். மாற்றம் தேவையெனில், கூறுகிறேன். ஆலமரத்தடியில் இது போன்ற உரையாடல்களைத் தொடங்கினால், பலரும் கண்டு, கருத்திட வாய்ப்புண்டு. வணக்கம்ழதகவலுழவன் (பேச்சு) 06:44, 18 ஆகத்து 2016 (UTC)`[பதிலளி]


ஒரு உதவி[தொகு]

தூய தமிழில் வீட்டு உபயோக பொருட்கள் குறித்த தமிழ் சொற்கள் தொகுப்பு தேவைப்படுகிறது. தொடர்புடைய சுட்டியை பகிரவும்.

நன்றி.

சுந்தர், மதுரை.

பகுப்பு:பெயர்ச்சொற்கள் என்பதில் உருவாக்கலாம். தற்போது பகுப்பு:பொருட்கள் என்பது விரிவு படுத்த வேண்டியுள்ளது. நீங்களும் உடன் உழைத்தால், உருவாக்கலாம். ஆங்கில பட்டியலைத் தாருங்கள் படங்களுடன் உருவாக்கலாம்.(எ. கா.) அன்னக் கரண்டி நல்ல கேள்வி. நன்றி. நம் தமிழுக்காக நாம் ஒன்றுசேர்ந்து பங்களிக்கலாமா?--தகவலுழவன் (பேச்சு) 03:24, 28 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]

8