உள்ளடக்கத்துக்குச் செல்

காலை வாரல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

காலை வாரல்

சொல் பொருள் விளக்கம்

காலைப் பிடித்தலுக்கு எதிரிடையானது காலைவாரல். காலை வாருதல் என்பது வீழ்த்துதல் பொருளது. “அவனை நம்பிக் கொண்டிருந்தேன். அவன் என் காலை வாரிவிட்டான்” என்பதில் நம்பிக்கைக் கேடும், கெடுதலும் விளக்கும். சண்டையில் காலை வாரி விடுதலும் வீழ்ந்தவன் மேல் ஏறிக் கொள்ளலும் என நிகழ்ந்த நடைமுறை உறுதி சொல்லி அவ்வுறுதியைக் காப்பாற்றாமல் ஒதுங்குதலைக் காலை வாருதலாகச் சொல்ல வாய்த்ததாம்.

"https://ta.wiktionary.org/w/index.php?title=காலை_வாரல்&oldid=1913031" இலிருந்து மீள்விக்கப்பட்டது