கொழுநன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

கொழுநன்(பெ)

  1. கணவன்
    • கொழுநன் அவளுக்கென் றியானுரைத்த மாற்றம் கெழுமி அவளுரைப்ப (சிலப்.)
  2. இறைவன்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. husband
  2. master, lord
விளக்கம்
  • கணவன் என்பவன், மணந்தவளுக்குக் கண்ணைப் போன்றவன் என்ற பொருளில் கணவன் என்ற சொல் வழங்கிவருகிறது. கொழுநன் என்பார் வள்ளுவர். மனைவிக்குப் பற்றுக்கோடானவன் என்பது இதன் பொருள் (கல்லானாலும் கணவன், தமிழ்மணி, 08 ஜூலை 2012)
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை (திருக்குறள்)
"https://ta.wiktionary.org/w/index.php?title=கொழுநன்&oldid=1986673" இலிருந்து மீள்விக்கப்பட்டது