கிள்ளுக்கீரை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


கிள்ளுக்கீரை (பெ)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  1. கிள்ளி யெடுக்கப்படும் கீரை வகை.
  2. எளிதில் சமாளித்துவிடலாம் என்று இளக்காரமாகக் கருதப்படுபவர்; அற்பம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. feeble-rooted greens, as easily plucked
  2. anything/anyone easily handled, often used in reference to a weak man
விளக்கம்
  • மனித முயற்சியின்றி தானாகவே எல்லா இடங்களிலும் மண்டி முளைக்கும் கீரைவகை. முளைக்கீரையைப் போன்ற தோற்றத்தையும், கதிர்களையும் கொண்டு உருவத்தில் சற்றே சிறியதாக இருக்கும்.தேவைப்பட்டால் இந்தச் செடிகளை பிடுங்காமல் இலைகளை மட்டும் கிள்ளி சமைத்து உண்பர்.ஆனால் மீண்டும் இந்த செடிகளை தண்ணீர் விட்டோ, எரு இட்டோ வளர்க்கமாட்டார்கள். அவை தானாகவே மறுபடியும் கிளைத்து வளரும்.மீண்டும் மனிதர்களுக்கு உணவாக உபயோகப்படுவதற்கு!இதைப்போலவே தேவைப்படும்பொது ஒருவரின் உதவியை, தான் ஒருபோதும் அவருக்கு உதவியிராதபோதும், கோரிப்பெற்று பிறகு வேலை முடிந்ததும் அவரை கண்டுகொள்ளாமல் உதாசீனப்படுத்துவார்கள். இந்நிலையில் உதவி செய்தவர் கிள்ளுக்கீரைப் போன்றவராகிறார்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---கிள்ளுக்கீரை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கிள்ளுக்கீரை&oldid=1994874" இலிருந்து மீள்விக்கப்பட்டது