வாரணம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

வாரணம், பெயர்ச்சொல்.

  1. வாழை(சங். அக.)
  2. சங்கு. (பிங்கல நிகண்டு) - வாரணத்து வாயடைப்ப (இரகு. நாட்டு. 43)
  3. யானை (எ. கா.) -புகர்முக வாரணம் .

(எ. கா.) -வாரணம்ஆயிரம் ஆயிரம் சூழ வலஞ்செய்து

  1. உறையூர் வைகறை யாமத்து வாரணங்கழிந்து (சிலப்பதிகாரம் 11, 11.)
  2. கடல் (பிங்கல நிகண்டு) - வாரணஞ் சூழ்புவி (தனிப்பாடல் ii, 167, 414)
  3. தடை
  4. கவசம்
  5. [[கோழி ) சிறுதினை மலரொடு விரைஇ மறிஅறுத்து

வாரணக் கொடியோடு வயிர்பட நிறீயி -திருமுருகாற்றுப்படை.

  1. பன்றி
  2. நிவாரணம், விடுதல். (சதுரகராதி)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. plantain
  2. conch
  3. elephant
  4. Uṟaiyūr, an ancient capital city of the Cōḷas
  5. sea
  6. obstacle
  7. A coat of armor
  8. A domestic fowl
  9. A hog
  10. leaving off, removal, as நிவாரணம், விடுதல். (சதுரகராதி)


( மொழிகள் )

சான்றுகள் ---வாரணம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

  1. வாரணம் ஆயிரம் சூழ வந்தவன் :ஆண்டாளின் பாடல்
"https://ta.wiktionary.org/w/index.php?title=வாரணம்&oldid=1902728" இலிருந்து மீள்விக்கப்பட்டது