தலையீடு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


தலையீடு (பெ)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  1. தலையிடுகை
  2. முதல் தரம்
  3. தலைப்பிலிருப்பது. (ஆற்றங்கரையில் தலையிட்டுக்கொல்லையில்)
  4. முதல் ஈற்று
  5. சுவரின் தலைப்பாகத்தில் கட்டப்படும் செங்கல் வரிசை.
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. interference, intervention, engaging, undertaking
  2. first quality, highest grade
  3. that which is nearest or first
  4. first delivery or yeaning; first crop (Colloq).
  5. (Arch.)coping (Colloq)
விளக்கம்
பயன்பாடு
  1. political interference - அரசியல் தலையீடு
  2. அரசியல் தலையீடு இல்லாமல் இருந்தால்தான் காவல்துறை சிறப்பாக செயல்பட முடியும் (தினமணி, 18 சூலை 2009)
  3. விளையாட்டு வீரர்கள் தேர்வில் அரசியல் தலையீடு எதுவும் இல்லை (தினமணி, 8 ஆகஸ்ட் 2009)
  4. இவ்விஷயத்தில் அரசு தலையீடு இருந்தால் விரைவில் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் (தினமணி, 7 ஏப்ரல் 2010)
  5. அதிகாரச் செல்வாக்கு உள்ளவர்களின் தலையீடு இந்த நாட்டின் பல்கலைக்கழகங்களை எப்படி எப்படியோ ஆக்கிவிட்டது ( சத்திய வெள்ளம், நா. பார்த்தசாரதி)
  6. தலையீட்டு நிலம் - land of first quality

(இலக்கியப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---தலையீடு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தலையீடு&oldid=1986715" இலிருந்து மீள்விக்கப்பட்டது